சுட்டொலிக் காண்டம்
-—
முகம் முகப்பு = முன் மண்டபம், முனைப்பகுதி.
—
முகம் முகன் - முகனை - மோனை = சீர்களின் முதலிடம், அவற்றின் முதலெழுத்துகள் ஒன்றிவரல், முகப்பு.
முகம் -முகர் - முகரி = முன்புறம்.
-
முந்து முந்தி = முன்றானை.
முன் - முனை. (போர் முனை முனை - war front)
முன்று - (முன்றம்) - முற்றம். (முன்று + இல் = முன்றில்.)
45
இனி, குவிந்த அல்லது கூரிய பொருள்களின் முற்பகுதியைக் குறிக்குஞ் சொற்களாவன:
—
குனை கொனை = நுனி (வடார்க்காட்டு வழக்கு.)
துள் தூ = நுனி.
நுதி - நுனி.
(நுன்) - நுனி, நுனை.
முன் - முனி, முனை.
"
முள் முளை = முனை.
(2) முன்னுறலியல்
(1) தோன்றுதல்
ஒன்றினின்று இன்னொன்று முன்வருதலே தோன்றுதலாதலின், முன்மைக்கருத்தில் தோன்றுதற் கருத்துப் பிறந்தது. ஒரு பொருள் எத்திசையில் தோன்றினும், அதன் முகத்தை நோக்க அது வருந்திசை அதற்கு முன்மையாதல் காண்க. இதனால், தோன்றுதலை முகஞ் செ-தல் என்று கூறும் வழக்கையும், நோக்குக.
முன்மை என்பது முன்னாகவுள்ள நிலைமையையும், முன்னுறல் என்பது முன்வரும் இயக்கத்தையும், குறிக்குமென வேறுபாடறிக.
66
"உண்மை வினைவந் துருத்தலொழி யாதெனும்" (மணிமே. 26:82) உருத்தல் தோன்றுதல் (உ.வே.சா. உரை.)
"ஊழ்வினை யுருத்துவந் தூட்டும்'
உருத்து = வெளிப்பட்டு (அரும்பதவுரை)
ருத்து = உருக்கொண்டு (அடியார்க்கு நல்லாருரை.)
(சிலப். பதிகம்,.52)