உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 13.pdf/64

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




46

முதற்றா-மொழி அல்லது தமிழாக்க விளக்கம்

ருத்தல் = தோன்றுதல், முளைத்தல், உருவெடுத்தல்.

உரு

=

தோற்றம், வடிவம், உடல், படிமை, தெ-வச் சிலை, ஓவியம், ஓவியவேலையான பூத்தொழில், வடிவுள்ள தனிப்பொருள்.

உரு உருவு உருவம்.

உருப்படி

=

தனிப்பொருள், தனிப்பொருள் (article)

ஓர் உருவின் படி (copy)யான பொருள், படியான

என்பன, உடம்பின் வளர்ச்சி

உருப்படுதல் உருக்குலைதல்

தளர்ச்சிகளைக் குறிக்கும் வழக்காறுகள்.

உருப்போடுதல்

=

மணிமாலையிலுள்ள ஒவ்வோர் உருவிற்கும்

ஒவ்வொரு முறையாக ஒரு மந்திரத்தை ஓதுதல், அல்லது ஒரு மந்திரத்தின் ஒலிவடிவைப் பெருக்குதல்; மந்திரம்போல ஒன்றை மனப்பாடஞ் செ-தல். உருவேற்றுதல் என்பதும் இதுவே.

=

ரு ஒரு தனியிசை வடிவு. பண், பாட்டு, மெட்டு, தோற்ற வகையைக் குறிக்கும் நிறம் வண்ணம் முதலிய சொற்களும், இசை வகையைக் குறித்தல் காண்க.

-

உரு உருவு உருபு = பெயர் வேற்றுமையின் வடிவான ஈறு,

உவமையின் வடிவான சொல்.

அகத்தியத்தை நோக்க வழிநூலும் அதற்கு முந்திய நூல்களை நோக்கச் சார்பு நூலுமான தொல்காப்பியத்தில், உருபு என்பது ஓர் இலக்கணக் குறீயீடாகக் குறிக்கப்பட்டிருப்பதனாலும், அது தமிழிலக் கணந் தோன்றிய தொன்றுதொட்டு வழங்கிவரும் மரபுச்சொல் லாத லாலும், அது தூய தமிழ்ச்சொல் என்பது ஒருதலை. தோன்றுதலைக் குறிக்கும் வேறு பல சொற்களும் உகரத்தையேனும் உகரமோனையை யேனும் உகரத் திரிபையேனும் முதற் கொண்டிருத்தல் காண்க.

உரு - (உரும்பு) - அரும்பு அரும்புதல் = தோன்றுதல். குருத்தல் = தோன்றுதல்.

“அதனின்று மொருபுருடன் குருத்தான்"

(விநாயகபு. 72: 4)

(குரு) - கரு = முதற் பொருளில் தோன்றும் பொருள்.

துளிர்த்தல் = தோன்றுதல்.