உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 13.pdf/65

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




சுட்டொலிக் காண்டம்

நுனை – நனை. நனைதல் = தோன்றுதல்.

நுதலுதல் = தோற்றுவித்தல்.

பூத்தல் = தோன்றுதல். பொடித்தல் = தோன்றுதல்.

முகிழ்த்தல் = தோன்றுதல்.

முளைத்தல் = தோன்றுதல்.

முறிதல் = தோன்றுதல்.

47

இச் சொற்களெல்லாம் முன்வருதல் அல்லது முன்தள்ளுதல் என்பதையே வேர்ப்பொருளாகக் கொண்டவை என்பது, துள் (தள்), முள் (முட்டு) முதலிய சொற்களால் உணரப்படும். துள் என்னும் அடியினின்று பிறந்த துருத்து என்னும் சொல்லும், முள் என்னும் அடியினின்று பிறந்த முட்டு என்னும் சொல்லும். முன் தள்ளுதலைக் குறித்தல் காண்க. தோன்றுதலை (முன் வருதலை)க் குறிக்கும் உருத்தல் என்னும் வினைச்சொல் வடமொழியில் வழங்காமையையும், உருவம் என்னும் பண்புப் பெயரின் திரிபான 'ரூப்' என்பது மட்டும் அதில் வழங்குதலையும், நோக்குக.

(2) ளமை

ஒரு பொருள் தோன்றிய நிலை அதன் இளம்பருவமாதலின், தோன்றற் கருத்தில் இளமைக் கருத்துத் தோன்றிற்று.

i. ளமை (நிலைத்திணை)

உல்லரி = தளிர். (உலிர்) - இலிர். இலிர்த்தல் = தளிர்த்தல்.

உரு

(உரும்பு)- அரும்பு = மொட்டு. அரும்புதல் = தோன்று தல்,

முளைத்தல், அரும்பு - அருப்பம் = முளைக்கும் மீசை.

(குள்) - கொழுந்து = தளிர். குள் -கெழு கெழுமு. கெழுமுதல் = முளைத்தல்.

குரு குருகு = குருத்து.

=

குரு குருத்து - குருந்து தென்னை, பனை முதலியவற்றின் இளவிலை.

(குருந்து) - கருந்து = மரக்கன்று (கோடைமலை வழக்கு.)

-

குரு குரும்பு குரும்பை = தென்னை, பனை முதலியவற்றின் பிஞ்சு.