உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 13.pdf/74

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




56

முதற்றா-மொழி அல்லது தமிழாக்க விளக்கம் (3) முற்செலவியல்

இயக்கத்தில் முன்னுறலுக்கு அடுத்தது முற்செலவு. முன்னது இடத்து நிகழ்வும் பின்னது இடம் பெயர்வும் ஆகும்.

முற்செலவு தானே செல்லலும் தள்ளப்பட்டுச் செல்லலும் என இருவகைத்து.

(1) முன்தள்ளல்

i. காற்றை மூக்காலும் வாயாலும் தள்ளல்

66

=

99

உயிர். உயிர்த்தல் மூச்சுவிடுதல். மூச்சே உயிர்நாடியும் உயிர்நிலைக்கு அடையாளமுமாதலால், ஆவி உயிர் எனப்பட்டது. "உள்ளே போனால் மூச்சு, வெளியே போனால் போச்சு என்னும் பழமொழியை நோக்குக. உயிரையும் உயிர்ப்பையும் வடநூலார் பிராணன் என்று கூறுதலையுங் காண்க. உ-த்தல் = முன் தள்ளல், செலுத்துதல்.

காற்றை உள்ளிழுப்பதும் வெளிவிடுவதும் ஆகிய இரண்டும் சேர்ந்ததே மூச்சாயினும் மிக வெளிப்படையானதும் ஒலி விளைப் பதும் வெளியிடுவதேயாதலின், மூச்சு உயிர்ப்பெனப்பட்டது. 'மூச்சு விடுதல்' என்னும் வழக்கும் இக் காரணம்பற்றியதே.

உந்து உந்தி = பேசும்போது வா-வழிக் காற்றைத் தள்ளு வதாகக் கருதப்படும் கொப்பூழின் உட்பக்கம், கொப்பூழ்.

"உந்தி முதலா முந்துவளி தோன்றி"

என்பது தொல்காப்பியம்.

(பிறப்பியல்.1)

உந்தியிலிருந்து எழுப்பப்படும் காற்றைக் குறிக்கும் உதானன் என்னும் வடசொல், உது என்னும் அடியைக் கொண்டிருப்பது கவனிக் கத்தக்கது.

"உந்தியில் தோன்றும் உதான வளிப்பிறந்து'

என்பது நேமிநாதம்.

தும்முதல் = மூக்கு வழியா-க் காற்றைத் தள்ளுதல்.

துரத்துதல் = வா-வழித் தீய காற்றை வன்மையா-ச் செலுத்துதல் (cough).

(6)