உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 13.pdf/75

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




சுட்டொலிக் காண்டம்

முசுமுசுத்தல் = குறட்டை விடுதல்.

முசு-மூசு. மூசுதல்=மூச்சை விடுதல், மோப்பம் பிடித்தல்.

மூசு-மூச்சு. மூசு-மூஞ்சு-மூஞ்சி=மூக்கு, மூக்குள்ள முகப்பகுதி (muzzle).

மூஞ்சுதல் = மூச்சுவிடுதல், மோப்பம் பிடித்தல்.

மூஞ்சு -மூஞ்சுறு- மூஞ்சூறு-மூஞ்சி நீண்ட அல்லது

57

எதையும்

மோப்பம் பிடிக்கின்ற எலி. தென்னாட்டார் இதனை மூஞ்செலி என்பர். மூஞ்சு-மூஞ்சை = நீண்ட மூக்கு அல்லது முகம்.

ஒருவன் இளைத்துக் களைத்த நிலையில் விரைந்து வலிதா- மூச்சுவிடின், "மூசு மூசென்று இளைக்கிறான்" என்பர். இவ் வொலிக் குறிப்பு ஒப்பொலியும் சுட்டொலியும் கலந்ததாகும்.

முசு-முசி. முசித்தல்= மூச்சிழைத்தல், களைத்தல், இளைத்தல், மெலிதல்.

முசிப்பாறுதல் =இளைப்பாறுதல்.

ii. காற்றைக் கையால் தள்ளல்

ஊதுதல் = வாயால் ஊதுதல்போல் கொல்லன் துருத்தியாற் காற்றைத் தள்ளுதல்.

ஊதல்=காற்று நிறைந்தாற்போற் பருத்தல், ஊத்தம் = ஊதல் (பருத்தல்).

துருத்து

=

துருத்தி ஊதுலைக் குருகு, துருத்தி போன்ற தோற்

பைக்குழல் (bag-pipe). துருத்தி-துத்தி-தித்தி.

iii. பிற பொருள்களைக் கால் கையால் தள்ளல்

உதைத்தல் = முற்செலுத்துதல், காலால் முன் தள்ளுதல்.

"சிலையுதைத்த

கோற்கிலக்கம்"

உந்துதல் = முன் தள்ளுதல், தள்ளுதல்.

உந்து-உஞ்சு-உஞ்சல்=உந்தப்படும் தாப்பிசை.

உஞ்சல் - ஊஞ்சல்-ஊசல்.

உன்னுதல்=உந்துதல்.

(கம்பரா. கார்முக.9)