உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 13.pdf/82

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




64

முதற்றா-மொழி அல்லது தமிழாக்க விளக்கம்

(புறம். 6)

துள்ளுதல் = விரைதல். துள் - துண் - துண்டை = துடுக்கானவன்.

துண்ணெனல் = விரைதல்.

துனைதல் = விரைதல்.

துவல் = விரைவு. துவலுதல் = விரைதல்.

பொள் - பொள்ளென = விரைவாக.

முள் -முண்டு - மண்டு. மண்டுதல் = விரைந்து செல்லுதல்.

"கடற்படை குளிப்ப மண்டி'

""

(முள்) = (மு) - முயல் = வேகமாக ஓடும் சிறு விலங்கு வகை. (முள்) - (மள்) - மழ - மழமழ (விரைவுக் குறிப்பு).

(முல் - (மல்) - வல் = விரைவு. வல்லே = விரைவாக. வல் - வல்லை = விரைவு.

"ஒன்றின் வல்லே செயிற் செ-க

ii. ரகர வெதுகை

சுரு சுருக்கு = விரைவு. சுருக்கா-வா என்பது வழக்கு.

சுருசுருப்பு = ஊக்கம். சுரு

சரு -சருக்கு (வி. கு.).

சரு - சரேல் ( வி.கு.). சரு சர – சரசர ( வி. கு.).

சர - சரட்டு (வி.கு.).

=

(நாலடி. 4)

-

துர - துரை = வேகம். துரத்தல் = ஆணியை முடுக்குதல். துர - துரத்து (பி.வி.). துரத்துதல் = முடுக்குதல், வேகமா ஓட்டுதல்.

(புரு) - பர - பரபர - பரபரப்பு.

(புரு) - பரு பரி = வேகம், வேகமான செலவு, வேகமாகச் செல்லுங் குதிரை. பரிதல் = ஓடுதல்.

(புரு) - பொரு - பொருக்கு (வி. கு.). பொருக்கென்றெழுந்தான் என்று கூறுதல் காண்க. பொருக்கு - பொக்கு (கொச்சை வழக்கு). பொருக்க

=

விரைவாக.

(முரு) - விரு

விருவிரு - விருவிருப்பு

=

விரைவு. விருவிரு

வென்றுபோ என்னும் வழக்கைக் காண்க.

விரு - விருட்டு (வி.கு.)

விரு - விர விரை - விரைவு. விரை - விரைசி.