உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 13.pdf/85

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




சுட்டொலிக் காண்டம்

vi. சகர வெதுகை

(குசு)-கிசு-கிசுக்கு(வி. கு.).

புசு-புசுக்கு-பொசுக்கு (வி. கு) புசு-பொசு பொசுபொசு

(முசு)-விசு-விசுவிசு (வி. கு.).

விசு-விசுக்கு (வி. கு.).

67

பொசுக்கென்று போ-விட்டது, விசுவிசுவென்று பிடித்தெரிகிறது, விசுக்குவிசுக்கென்று நடந்து போகிறான், என்பன வழக்கு.

விசு-விசை = வேகம்.

(7) (நடுக்கம்) அச்சம்

உடலும் நெஞ்சாங்குலையும் விரைந்து அசைவது அச்சத்தைக் குறிக்குமாதலால், விரைவுக் கருத்தில் அச்சக் கருத்துப் பிறந்தது. துள்-துண். துண்ணெனல் = திடுக்கிடுதல், அஞ்சுதல்.

துண்-துணுக்கு. துணுக்கிடுதல் = திடுக்கிடுதல்.

துணுக்கு-துணக்கம் = நடுக்கம், அச்சம்.

துண்-திண்-திடு-திடுக்கு.

நுடு-நடு-நடுங்கு -நடுக்கு-நடுக்கம்.

விது-விதிர்-விதிர்ப்பு

=

நடுக்கம். விதிர்விதிர்ப்பு

=

நடுநடுக்கம்.

விது-விதுக்கு. விதுக்கு விதுக்கெனல்=அச்சத்தால் நெஞ்சம் படக்குப் படக்கென்று அடித்துக்கொள்ளுதல். இங்ஙனம் அடித்துக்கொள்ளு தலை வெருக்கு வெருக்கென்றிருக்கின்றது என்பர். விதுக்கு விருக்கு வெருக்கு-வெருவு-வெரு=அச்சம். வெருவுதல்= அஞ்சுதல். வெரு- வெருள்-வெருளி-அச்சுறுத்தும் புல்லுரு வெருள்-விரள்-மிரள். விரள் விரட்டு. விரட்டுதல்=அச்சுறுத்துதல், அச்சுறுத்தி வேகமாக ஓட்டுதல். (8) வீசுதல் ஒருவன்

வேகமா- நடக்கும்போது, அவன் கை வேகமா - வீசுவதாலும், அங்ஙனம் வீசும்போது அது நீளுவதாலும், வேகமா- நடப்பதைக் குறிக்கும் விசு என்னும் சொல், வேகமா- ஒன்றை வீசுவதையும் நீட்சியையுங் குறிக்கும் சொற்களைப் பிறப்பித்துள்ளது.