உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 13.pdf/98

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




80

முதற்றா-மொழி அல்லது தமிழாக்க விளக்கம்

சேணோன் = மலைவாசி, பரணிலிருந்து காப்பவன். சேண் - சேடு உயரம், பெருமை.

சேடு - சேடன்

=

பெரியோன், கடவுள். சேடல் = உச்சிச் செலுந்தில்

என்னும் மரம். சேடு - சேடி = விஞ்சையருலகம்.

=

=

சேடு - சேட்டம் = மேன்மை. சேட்டன் பெரியோன், மூத்தவன், தமையன். சேட்டி = தமக்கை.

சேட்டை = மூத்தவள், மூதேவி.

ஏண் - சேண். ஒ.நோ: ஏமம் - சேமம்.

சேண் - சேடு - சேட்டம். ஒ.நோ: கோண் - கோ-கோட்டம்.

சேடம் = பெருமை, மிகுதி, மீதி. ஒ.நோ: மிஞ்சுதல் = மிகுதல், மீதல். மிஞ்சு - மிச்சம்.

=

எஞ்சுதல் மேற்படுதல், மிகுதல், மீதல். எஞ்சு எச்சு எச்சம். மிகுதியா-க் கொடுத்தலை எச்சா-க் கொடுத்தல் என்பது கொங்கு நாட்டு வழக்கு.

எஞ்சுதல் = கடத்தல்.

"இரக்கு வாரே னெஞ்சிக் கூறேன்"

தெண்டுதல் = நெம்புதல், மேற்கிளப்புதல்.

(பதிற். 61:11)

தெண்டு - தெண்டில் = தலையை அடிக்கடி மேற்கிளப்பும் ஓணான்.

தேங்குதல் = உயர்தல், மிகுதல்.

தேங்கு - தேக்கு தேக்கம்.

தேக்கு = உயர்ந்த அல்லது உயர்வான மரம்.

தேக்குதல்

=

அடிவயிற்றிலுள்ள காற்றை எழுப்புதல், ஏப்பம்

விடுதல். ஏப்பம் என்னும் சொல்லும் ஒலிக்குறிப்பொடு எழுச்சி குறித்த ஏகாரங் கலந்ததே.

தேர் = உயரமான ஊர்தி.

தேரி = மணற்குன்று.

நெம்புதல் = கிளப்புதல்.

மெச்சுதல் = உயர்த்திப் பேசுதல்.

மெட்டு

=

மேடு, மண்திட்டு, யாழிசைத் தானக்கட்டை, இசைப்

போக்கு, மேன்மை.