உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 14.pdf/122

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




108

குள் குளம்.

முதற்றா-மொழி அல்லது தமிழாக்க விளக்கம்

குள் - குண்டு = சிறு குட்டை.

குள் குட்டு குட்டை = சிறு குளம்.

குள் - (கள்) - (க) கயம் = குளம்.

துள் - தொள் - தொழுவை = மடு.

தொள் - தோள் - தோ- - தோயம் = நீர், கடல்.

புள் - பொள் - பொ- - பொ-கை = குளம். புள் - பள் - பாழி = சிறு குளம்.

பள் - படு = நீர்நிலை.

படு படுகை = நீர்நிலை, ஆற்றோரத்து நிலம்.

படுகை - படுகர் = நீர்நிலை.

பள் (பல்) - பயம் = நீர். பயம் - பயம்பு = நீர், நீர்நிலை.

பள் - பண் = நீர்நிலை. பண் - பாணி = நீர்.

முள் - மள் - மடு = நீர்க்கிடங்கு.

XX. தோண்டப்பட்ட நீர்நிலை

குள் கிள் கிணறு. கிள் - கெள் கேள்கேணி.

துள் - துர - துரவு = கிணறு.

xxi. கீழ்மை

பள்ளம் நிலமட்டத்திற்குக் கீழாயிருப்பதால், பள்ளத்தைக் குறிக்கும் சொற்களினின்றும் சொல்லடிகளினின்றும் கீழ்மையைக் குறிக்கும்

சொற்கள் தோன்றியுள்ளன. கீழ்மை நிலம் (இடம்) பற்றி யதும் நிலையைப் பற்றியதும் என இருவகைப்படும். நிலம்பற்றி யதும்,

உட்பட்டதும் மேற்பட்டதும் என இருதிறப்படும்.

குள் - கிள் - கீழ் -கீழ்மை.

கீழ் - கிழக்கு = கீழ், கீழிடம், இழிவு.

'காணிற் கிழக்காந் தலை"

"கிளைஇய குரலே கிழக்குவீழ்ந் தனவே"

"கிழக்கிடு பொருளோ டைந்து மாகும்"

நிலத்திற்கு

(குறள். 488)

(குறுந்.337)

(தொல்.1226)