உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 14.pdf/138

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




124

முதற்றா-மொழி அல்லது தமிழாக்க விளக்கம்

சுள் - சொள் - (சோள்) - சோணங்கி = மெலிந்தவன் - வள் து.

நுள் - நொள் நோள் - நோ- - நோ-ந்தான் - நோ-ஞ்சான் மெலிந்தவன். நோ-தல் = மெலிதல்.

முல் - மெல் - மெலி - மெலிவு.

xi. துன்பம்

உடலும் உள்ளமும் நோகக்கூடிய நிலை துன்பம்.

கும் - குமை = துன்பம், அழிவு.

துல் - துன் - துன்பு. துல் - தொல் - தொல்லை = துன்பம்.

துள் - (து- -துயர் - துயரம்.

துள் - தொள் - தொ-- தொ-யல் = துன்பம்.

தொ- - தொ - தொந்தரவு. தொந்தரை = துன்பம்.

தொந்தரித்தல் = துன்புறுத்துதல்.

நுள் - நொள் - நொ--நொ - நொம்பு நொம்பலம் = துன்பம்.

xii. நிலைதளர்தல் (வறுமையடைதல்)

உல் ஒல் ஒல்கு ஒற்கு ஒற்கம் = வறுமை.

ஒல்குதல் = வறுமையடைதல்.

உள் - எள் - எண்மை. எள் - எளி எளி - எளிமை

=

எள் - ஏள் - ஏட்டை = வறுமை.

ஏள் - ஏழ் ஏழமை. ஏழ் = ஏழை.

எளிமை = வறுமை.

சுள் - சொள் - (சோள்) - சோர் - சோர்வு = வறுமை.

நுள் - நொள் - நொடி. நொடித்தல் = தளர்தல், கெடுதல்.

நொ -- நொ - நொந்தகை = வறுமை. நொ - நொந்தலை = வறுமை. முல் - மெல் - மெலி. மெலிதல் = வறுமையடைதல்.

xiii. தோற்றல்

மென்மையால் அல்லது தளர்ச்சியால் தோல்வியுண்டாம்.

துல் - தொல் - தொலை. தொலைதல் = தளர்தல், தோற்றல். தொலை - தொலைவு = தோல்வி. தொல் -தோல் - தோல்வி. முல் - மெல் - மெலி மெலிவு = தோல்வி. - -

=