சுட்டொலிக் காண்டம்
"மெலிவென்பது முணர்ந்தேன்"
125
(கம்பரா. முதற்போ. 181)
முல் - வெல். வெல்லுதல் = மெலித்தல், தோற்கடித்தல்.
வெல் - வென் = வெற்றி, வெல் - வேல் = வெற்றி. வெல் - வெற்றி.
மெது மெத்து. மெத்துதல் = மெலித்தல், வெல்லுதல்.
—
(4) நீளல் துறை
நெகிழும் பொருள்கள் நீளுதலால், நெகிழ்ச்சிக் கருத்தில் நீட்சிக் கருத்துத் தோன்றிற்று. செங்குத்து படுக்கை என்னும் இருவகை வாகிலும் நீட்சி நிகழும்.
i. நீளுதல்
நெகிழ் - நீள் - நீளம். நீள் - நீட்சி.
நீள் - நீர் = நெகிழும் (நீளும்) பொருள். நீர் - நீல் = நீலம் = கடல்நீரின் நிறம்.
நீள் - நீட்டு = நீட்டப்படும் ஓலை. நீட்டு - நீட்டம்.
நீள் - நீடு.
நீள் - நெள் - நெடு - நெட்டு நெட்டை.
நெடு - நெடில், நெட்டு - நெட்டம்.
நெட்டு = நெடுமை, நெடுந்தூரம். நெட்டம் = நெடுமை, செங்குத்து.
நீட்சி என்பது செங்குத்து வாகிலும் கொள்ளப்படுதல்,
"உருவத்தால் நீண்ட உயர்மரங்க ளெல்லாம் பருவத்தா லன்றிப் பழா'
என்னும் ஔவையார் கூற்றால் அறியப்படும்.
கெட்டு -நட்டு -நட்டம்.
நட்டமா- நிற்கிறான் என்னும் வழக்கைக் காண்க.
ii. நிற்றல்
நிற்றலாவது ஒரு பொருள் செங்குத்தாக நீண்டிருத்தல். நீள் - (நிள்) - நில்.
நில் - நிலை - நிலையம்.