உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 14.pdf/162

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




முதற்றா-மொழி அல்லது தமிழாக்க விளக்கம்

148

அமை - கெட்டி மூங்கில்.

அமளி = ஆரவாரம், பேரொலி.

(1) வளைதல் துறை

4. வளைதலியல்

A.

(திருப்புதல்) அமடுதல் = புரள்தல். அமட்டுதல் = புரட்டுதல்.

(2) வட்டத்துறை

அம்பு = வளையல். அம்பணம் = வட்டமான ஆமை.

ஆம்பி = வட்டமான காளான். அம் = நிலத்தைச் சூழ்ந்த நீர் (கடல்), நீர், நீரால் ஏற்படும் அழகு.

அம் - அம்பு = கடல், நீர். அம்பு - அம்பணம் = நீர், நீருள்ள வாழை. அம் - ஆம் = நீர்.

=

அம்பு = கதிரவனைச் சுற்றும் அல்லது வட்டமான உலகம்.

அமர் = நகரைச்சூழ்ந்த கோட்டைமதில்.

5.

துளைத்தலியல்

(1) துளைத்தல் துறை

அம்பு உட்டுளையுள்ள மூங்கில்.

அம்பணம் = மரக்கால், நீர்விழுங் குழா-, யாழ்.

அம்பணவர் = யாழ்ப்பாணர், பாணர்.

அம்பணத்தி = மரக்காற் கூத்தாடிய காளி.

அம்பி = தோணி.

ஆம்பி = நீர்ச்சால் (பன்றிப்பத்தர்).

(2) புகுதல் துறை

அமிழ்தல் = முழுகுதல் (அமிழ் ஆழ்-ஆழி.)

அமுங்குதல்

=

=

உள்ளழுந்துதல். அமுக்குதல் அமிழ்த்துதல்,

உள்ளழுத்துதல், உண்ணுதல்.

சோற்றை அமுக்குகிறான் என்பது கொச்சை வழக்கு.

அம்மம் = குழந்தையுணவு.

அம்மு = சோறு.

அமுது = சோறு, நீர், பால். அமுது - அமுதம்.

அமிழ்து = பால். அமிழ்து அமிழ்தம் = உணவு (மணி 28: 116)