உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 14.pdf/161

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




பின்னிணைப்பு

(2) குவிதல் துறை

147

அம்பல் = குவிதல், குவிந்த அரும்பு, அரும்புபோல் அடக்கமான பழிச்சொல். அம்பல் - ஆம்பல் = பகலிற் குவியும் குமுதம்.

(3) கலித்தல் துறை

அமர் = போர். அமர்த்தல் = போர் செ-தல், மாறுபடுதல். அமர்தல் = பொருந்துதல், விரும்புதல், அன்புகூர்தல்.

(4) கலங்கல் துறை

அமடுதல் = மயங்குதல். அமட்டுதல் = மயக்குதல், அச்சுறுத்துதல். (5) பொருத்தல் துறை

=

=

அம்பர் = பிசின். அமர்தல் = பொருந்துதல், இருத்தல். அமடுதல் சிக்குதல். அமைதல் = பொருந்துதல், போதியதாதல், ஏற்படுதல், காரியம் முடிதல். அமைத்தல் பொருத்துதல், சேர்த்தல், பொருந்து மென ஒப்புக்கொள்ளுதல், ஆயத்தஞ்செ-தல், ஒழுங்குபண்ணுதல், ஏற்படுத்தல், காரியங்களை முடித்தல்.

அமை அமைச்சு = நாட்டுக் காரியங்களை அல்லது அரசியல் வினைகளை அமைத்தல், அங்ஙனம் அமைக்கும் மந்திரி.

அமைச்சு - அமைச்சன்.

அம்மை = அமைதி. அம் - அமை - அமைதி = அமைப்பு.

=

அமை - அமையம் பொருந்தும் நேரம், ஒ. நோ: நேர் - நேரம். அமையம் -அமயம் = சமையம்.

(6) மூடல் துறை

அம்முதல் = மறைத்தல், மூடுதல்.

(7) ஒன்றல் துறை

அமர்தல் = பொருந்துதல், ஒத்தல். அமர என்பது ஓர் உவம வுருபு.

(8) உறழ்தல் துறை

அம்மி = அமுக்கித் தே-த்து அரைக்குங் கல்.

(9) திரளல் துறை

அமலை = திரட்சி, சோற்றுத்திரளை.