உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 14.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




20

i. கலவை

முதற்றா-மொழி அல்லது தமிழாக்க விளக்கம்

உலக்குதல் = நீரையும் சேற்றையும் மிதித்துக் கலக்குதல்.

-

(உள்) - அள் - அண் - ஆண் ஆணம் = கூட்டு.

வெந்த ஆணம்

வெந்தாணம்

=

வெந்தணம் - வெஞ்சணம். இது

வ்யஞ்சனம் என்னும் வடசொல்லின் திரிபாகக் கூறப்படும்.* பச்சடி

போன்ற வேகாத ஆணமும் உண்டென வறிக.

கும்

குமை. குமைதல் = குழம்புதல்.

-

குள் - குழ குழம்பு = பல சரக்குகள் கலந்த கூட்டு.

குழம்பு கூட்டுதல் என்னும் வழக்கைக் காண்க. குழம்பு குழம்பல்.

கூள்-

கூட்டு.

குல கல கலவை. கல - கலம் - கலம்பம் கதம்பம் = பலவகைப் பூக்கள் கலந்த மாலை.

கலம்பு - கலம்பகம் = பல வுறுப்புகள் கலந்து வருஞ் செ-யுள் நூல். (சூர்) - சார் சாறு = குழம்பு.

ii. கலக்கம்

பல பொருள்கள் ஒன்றாகக் கலக்கும்போது கலக்கம் உண்டா கின்றது. பொருட் கலக்கத்தால் சிலவிடத்து மனக்கலக்கமும் விளை கின்றது.

நீரு மண்ணுங் கலப்பது கலங்கல். அது பொருட்கலக்கம். பல ஆள்கள் கூடியிருக்கும்போது குறிப்பிட்ட ஒருவர் யார் என்று தெரியாது திண்டாடுவதும், பல வழிகள் கூடுமிடத்தில் செல்லவேண்டிய வழி எதுவென்று தெரியாது மயங்குவதும், ஒன்றைச் செ-வது அதை விட்டுவிடுவது என்னும் எண்ணங்கள் மனத்தில் தோன்றும்போது

ஒன்றைத் துணியாது ஊசாலடுவதும், மனக்கலக்கமாம்.

உழம்புதல் = பலவோசை கலந்தொலித்தல், குழம்புதல். உழப்புதல் = சொல்லால் மழுப்புதல்.

குல - கல கலங்கு கலங்கல்.

கலங்கு கலக்கு கலக்கம்.

கல் - கலுழ் கலுழி = கலக்கம், கலங்கல் நீர்.