சுட்டொலிக் காண்டம்
75
குறிப்பு: இங்குக் குறிக்கப்பட்டவற்றுள் மடக்கு என்னுஞ் சொல்லொன்றே பெயர்; பிறவெல்லாம் இடைச் சொல்.
xii. வேறாதல்
ஒன்றைத் திரும்பச்செ-வது
வேறொரு
முறை செ-வதும்,
ஒன்றினின்று திரிதல் அதனின்று வேறுபடுதலுமாதலால், திரும்பற் கருத்துச்சொல் வேறாதற் கருத்தைத் தழுவிற்று.
மறு = வேறு. மறு பிறவி = வேறு பிறப்பு.
மறுபடி = வேறொரு முறை. மறுநாள் = அடுத்த நாள்.
மறு மற்று = வேறு, திரும்பவும் வேறாக.
மற்று மற்ற மற்றை (பெயரெச்சம்).
மற்றொன்று = வேறொன்று.
மற்றப்படி = வேறுவகையில்.
மற்றவன் = வேறொருவன், பிறன், அடுத்தவன்.
xiii. மாறுதல்
வேறாதற் கருத்து மாறுதற் கருத்தைத் தழுவும். திரும்பு - திருப்பு. திருப்புதல் = மொழிபெயர்த்தல். சொல்லைத் திருப்புதல் = சொல்லை மாற்றுதல். திரும்பு - திறம்பு. திறம்புதல் = வேறுபடுதல், மீறுதல்.
திரிதல் = வேறுபடல், மாறுதல். திரித்தல் = வேறுபடுத்தல். திரி - திரிவு - திரிபு.
திரிசொல் = இயற்சொல்லினின்று திரிந்த சொல்.
புள்
-
புரு புரள். புரள்தல்
=
சொல் மாறுதல். புரள்
—
புரளி
=
மெ-ம்மாற்று, பொ- புரள் - புரட்டு - புரட்டன் . புரள் - பிறள் பிறழ்ச்சி. புரள் - புரட்சி.
―
முறு மறு மறுத்தல் = மாற்றுதல். மறு - மறுப்பு.
மறு - மறை = மறைப்பு, எதிர்ப்பு எதிர்மறை.
மறுக்களித்தல் = பழைய கொள்கைக்கு மாறுதல். =
மறுதலித்தல் = பழைய கொள்கைக்கு மாறுதல்.
-
-
மறு மாறு மாற்று மாற்றம்.