உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 14.pdf/91

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




சுட்டொலிக் காண்டம்

77

வள் = வளைவு. வள்

வரு வார் வா வ.

ஒ.நோ: தள் - தரு

தார்

தா த.

வரு: வருகிறான், வருகை, வருவா-, வரவு.

வார்: வாரானை (வருகை), வாரும், வாருங்கள் (ஏவற்பன்மை).

வார், வா (ஏவல் ஒருமை.)

வா -வ-வந்தான், வம்மின் (ஏவற்பன்மை).

வருகிறான் வருவான் என்னும் நிகழ்கால எதிர்கால முற்று வடிவுகளிலும், வருகை என்னும் தொழிற்பெயரிலும், வரு என்பது பகுதியா யிருத்தலானும்; வார் என்னும் ஒருமை யேவலிலும், வாரும் வாருங்கள் என்னும் பன்மை யேவலிலும், வார்தல் வாரானை என்னும் தொழிற்பெயர்களிலும், வார் என்பது பகுதியாயிருத்தலானும்; வா என்னும் ஏவலொருமை வடிவினின்று வாதல் வாவு என ஏதேனும் ஒரு தொழிற்பெயர் பிறவாமையானும், வருதல் என்னும் வினைக்கு

ருகரங்கூடிய வரு என்பதே பகுதியாம். வள் என்னும் அடியினின்று முதலாவது திரியக்கூடிய வள் - வர் -வர் - வரு என்பவையே.

இங்கு வருதல் வினைக்குக் கூறியதைத் தருதல் வினைக்குங் கொள்க. கோர் என்னும் சொல் கோ எனக் குறைந்ததுபோல, வரு என்பதன் திரிபான வார் என்னுஞ் சொல்லும் வா எனக் குறைந்த தென்க. நோ என்னும் வினை இறந்தகாலத்திலும் ஏவலிலும் நொ (நொந்தான், நொம்மாடா) எனக் குறுகியதுபோல, வா, தா என்பனவும் வ, த எனக் குறுகின.

வார் = வா (ஏவலொருமை).

"வந்திக்க வாரென

22

(umflum. 20: 76)

"வாரடா வுனக்கியாது தானர்தம் மகளடுக்கிமோ

xvi. வரைதல்

""

(பாரத. வேத்திர. 12)

வரைதலாவது எழுதுதல். எழுதுதல் என்பது, எழுத்து எழுது தலையும் படம் வரைதலையும் பொதுப்படக் குறிக்கும், முற்காலத்தில் படவெழுத்தே (Hieroglyphic or picture - writing) தமிழகத்தில் வழங்கியதால், எழுத்து என்னும் சொல் படத்தையும் வரிவடிவையும் ஒருங்கே உணர்த்திற்று.