உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 15.pdf/10

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முகவுரை

ix

தமிழ்நாட்டில், பல நூற்றாண்டுகளாகப் பல தமிழ்ப் பகைவர் பலவாறு தமிழைக் கெடுத்தும் மறைத்தும் வைத்திருப்ப தனால், அவற்றை எடுத்துச் சொல்வது இந் நூன்முடிபுக்கு இன்றியமையாததாயிருக்கின்றது. ஆகையால், அறிஞர் அதனை அருள்கூர்ந்து பொறுத்தருள்வாராக. யான் ஏதும் பிழை செய்திருப்பின், அதையும் எடுத்துக்கூறி என்னைத் திருத்துவதும் அவர் கடன்.

மொழிநூற் பயிற்சிக்கு வேண்டிய பொருள், இடம், காலம், துணை முதலிய ஏந்துகள் (வசதிகள்) எனக்கு மிகமிகக் குறைந்துள்ளன. ஆயினும், இந் நூல் இவ்வளவு உருப்பெற்றது இறைவன் திருவருளே.

என் கட்டுரைகளைக் குறைகூறி, என் முடிபுகள் முன்னிலும் வலிபெறுமாறு செய்த, பல நண்பர்கட்கும் யான் மிகவுங் கடப்பாடுடையேன்.

குற்றங் களைந்து குறைபெய்து வாசித்தல் கற்றறிந்த மாந்தர் கடன்.

"குணநாடிக் குற்றமு நாடி அவற்றுள்

மிகைநாடி மிக்க கொளல்”

புத்தூர், திருச்சிராப்பள்ளி,

29-1-1940

(குறள். 504)

ஞா. தேவநேயன்