158
ஒப்பியன் மொழிநூல் பொருள்மேற் படும்போது, மேற்பொருள் கீழ்ப்பொருள்மேற் படியும்; அப்போது, முன்னதன் வடிவம் பின்னதிற் பதியும். அவ் வடிவம், அப் படிந்த பொருளின் வடிவத்தையே போன்றிருக்கும்; (அடிச்சுவடுகளையும் முத்திரைகளையும் நோக்குக) இதனால், படி என்னுஞ் சொல் போல அல்லது வகையில் என்னும் பொருளில் வழங்கும்.
கா : அப்படி, இப்படி, உப்படி,எப்படி
அப்படி = அவ் வடிவம், அம் முறை - In that form. அப்படிச் செய் = அம் முறையிற் செய்,
= அதுபோலச்செய்
do so.
போல இருப்பது போன்மை. அங்ஙனமே, படியிருப்பது படிமை. ஒ.நோ: like-likeness.
வழிபடு வுருவமாவது, பொம்மையாவது, கடவுளைப் போல அல்லது மாந்தனைப்போலச் செய்யப்பட்டிருப்பதால் படிமை எனப்பட்டது. இஃதொரு பண்பாகுபெயர்.
படிமை என்னுஞ் சொல்லில், படி பகுதி; மை பண்புப் பெயரீறு. மையீறு தமிழ்க்கே யுரியதென்பது பின்னர்க் காட்டப் படும். வடமொழியில் படிமை, மகிமை முதலிய சொற்களை யெல்லாம் பகாச்சொற்களாகவே கொள்வர். அம் மொழியில் மையீறில்லை. தமிழிலோ அச் சொற்கள் பண்புப்பெயர்களான பகுசொற்களாகும்.
மை, குடி
மை,மடி
படி மை என்னுஞ் சொல்லை, அடி மை, மிடி - மை முதலிய பண்புப்பெயர்களோடு ஒப்புநோக்குக.
படியோலை
ஒரு மூலவோலையைப் பார்த்தெழுதினது, அல்லது அச்சிட்டது, அம் மூலத்தின்படி யிருப்பதால் படி (copy)யெனப் படும். என்று பண்டை நூல்களில் வழங்குதல் காண்க.
ப்ரதி,
படி, படிமையென்னும் தமிழ்ச்சொற்களையே ப்ரதிமா என வழங்குவர் வடநூலார். இப்போது, மூலச்சொற் களையே படிச்சொற்களாகக் காட்டுவது, எவ்வளவு பெரிய ஏமாற்றம் என்பதை எண்ணிக் காண்க. இங்ஙனமே, பல தமிழ்