பண்டைத் தமிழகம்
159
நூல்களும் கலைகளும், வடநூல்களும் கலைகளுமாகக் காட்டப் படுகின்றன றன வென்க.
.
தமிழ்ச்சொல்லை வடசொல்லாக மாற்றும்போது, பல முறைகளைக் கையாளுவர் வடநூலார். அவையெல்லாம் இந் நூலின் மூன்றாம் மடலத்தில் விரிவாய் விளக்கப்படும்.
ப்ரதி, ப்ரதிமா என்ற சொற்களில், கையாளப்பட்ட முறைகள்: (1) முதலெழுத்தை மெய்யாக்கி ரகரஞ்சேர்த்தல், (2) டகரத்தைத் தகரமாக்கல், (3) ஐயீற்றை ஆவீறாக்கல் என்பன.
பவளம், பகுதி முதலிய தமிழ்ச்சொற்களையும்,ப்ரவாளம், ப்ரக்ருதி என்று மாற்றுதல் காண்க.
வடமொழியிலும் தென்மொழியிலும் பொதுவாய் வழங்கும் சொற்களை, இன்னமொழிக்குரியவென்று துணிதற்கு விதிகள் இப் புத்தகத்தின் இறுதியிற் கூறப்படும். அவற்றுள் முக்கியமானது, பகுதிப்பொருள்பற்றியது. ஆரியர் தமிழ்ச்சொற்களை வட நூல்களில் எழுதிவைத்துக்கொண்டு, அவற்றுட் சிலவற்றிற்குப் 'பொருந்தப் புளுகல்' என்னும் முறைபற்றி, ஏதேனும் ஒரு பொருள் கூறுவர்; அது இயலாவிடின் இடுகுறியென முத்திரையிட்டு விடுவர். அவ் விடுகுறிச் சொற்கள், தமிழில் பகுதிப்பொருள் தாங்கி வழங்குமாயின் தமிழ்ச்சொற்களே யென்பது ஐயமறத் துணியப்படும்.
ஒரு மூலத்தின் படி (copy), அம் மூலத்தின் அளவாயே யிருத் தலால், அளவு என்னும் பொருளிலும் படி என்னுஞ் என்னுஞ் சொல் வழங்குவதாகும்.
கா: காற்படி (அரிசி),பட்டணம்படி முகத்தலளவு.
படிக்கல் - நிறுத்தலளவு.
படிமுறை, படிக்கட்டு முதலிய தொகைச்சொற்களும் முறையே சிறுசிறு அளவாய் ஏறுதல், பல அளவாய்ச் செல்லுதல் என்னும் கருத்துப்பற்றியனவே. வரும்படி வரும் பொருளளவு.
று
படி என்னுஞ் சொல் பதி என்று திரிவது முன்னர்க் கூறப்பட்டது. படிமானம் = பதிவு.
பண்டமாற்றிலும், ஈட்டுக்கடனிலும், ஒரு பொருளுக்கு ன்னொரு பொருள் கொடுக்கப்
அதன் மதிப்பளவுள்ள