160
ஒப்பியன் மொழிநூல் படுகின்றது. ஒர் அலுவலாளர் விடுமுறையிலிருக்கும்போது, அறிவிலும் ஆற்றலிலும், அவரளவுள்ள இன்னொருவர் அவருடைய இடத்தில் அமர்த்தப்படுகிறார்.
இதனால், பதில் என்னும் சொல் ஈடு, பதிலி (substitute) என்னும் பொருள்களில் வழங்கத் தலைப்பட்டது. பதி என்னும் சொல்லே லகரமெய்யீறு பெற்றுப் பதில் என்றாகும். இங்ஙனம் ஈறுபெறுவது பொருள் வேறுபடுத்தற்கென்க. படி (படில்) - பதில்.
பண்டமாற்றில் ஒரு பொருளுக்கு இன்னொரு பொருளை மாறித் தருவதுபோல, உரையாட்டில் அல்லது எழுத்துப் போக்குவரவில், ஒரு சொலவுக்கு இன்னொரு சொலவை மாறித்தருவது பதில் எனப்படும். மாற்றம் என்னுஞ் சொல்லை இதனுடன் ஒப்புநோக்குக. மாறிச் சொல்வது அல்லது (இருவர்) மாறிமாறிச் சொல்வது மாற்றம்.
வழக்காளிகள் இருவருள், வழக்காடி வாதியென்றும், பதில் வழக்காடி ப்ரதிவாதியென்றும் வடசொல்லாற் கூறப்படு கின்றனர். வழக்காடியின் கூற்றுக்கு மாறிக்கூறுவதால், பதில் வழக்காடி ப்ரதிவாதியெனப்படுகின்றான். (பதில் வழக்காடி, வழக்காடியின் வழக்கிற்கு எதிராக, மற்றொரு வழக்குத் தொடுப்பது எதிர்வழக்காகும்.) ப்ரதியுபகாரம் - மாறிச்செய்யும் நன்றி. கைம்மாறு என்னுஞ் சொல்லை நோக்குக. ப்ரதிபிம்பம் - மாறித்தோன்றும் வடி வம்.
ஓரினத்தைச் சேர்ந்த எல்லாப் பொருள்களும், ஒரேபடி (வடிவு அல்லது வகை)யாயிருத்தலான், (படி அல்லது) ப்ரதி என்னும் சொல், ஒவ்வொரு என்னும் பொருளிலும் வழங்குவ தாகும்.
படி + உ = படிவு + அம் = படிவம்
படிவு - வடிவு. படிவம் வடிவம். ப-வ போலி.
எனக்கு ஒரு படி(வகை)யாய் வருகிறது என்பதை, எனக்கொரு வடியாய் வருகிறது என்பர் தென்னாட்டார்.
பகு-வகு, பகிர்-வகிர், தபம்-தவம், என்பவற்றில் பகரத்திற்கு
வகரம் போலியாய் வருதல் காண்க.