166
ஒப்பியன் மொழிநூல்
""
கைக்கிளையெனச் சுட்டப்படும் என நச்சினார்க்கினியரே கூறியிருத்தல் காண்க. இது பின்னரும் விளக்கப்படும்.
(5) பார்ப்பனத் தொடர்பு கூறல்.
பார்ப்பனருக்குத் தொல்காப்பியர் காலத்தில், தமிழரிடத்தில் பாங்கத் தொழிலிருந்ததேயன்றிப் புரோகிதத் தொழிலில்லை யென்று, முன்னமே முன்னுரையிற் கூறப்பட்டது. ஆயினும் தெளிவுறுத்தற் பொருட்டு இங்கும் கூறுகின்றேன்.
தொல்காப்பியப் பொருளதிகாரத்தில், இன்பவொழுக்கத் தையும் இல்லறத்தையும் சிறப்பாய்க் கூறும் அகத்திணையியல் களவியல் கற்பியல்களிலேனும், பொதுப்படக் கூறும் பிற வியல் களிலேனும், பார்ப்பார்க்கு அறுதொழிலும் பாங்கத் தொழிலும், ஆவொடுபட்ட நிமித்தங் கூறலும் வாயில் தொழிலுமேயன்றிப் பிற தொழில்கள் கூறப்படவே யில்லை.
அறுவகைப்பட்ட பார்ப்பனப் பக்கமும்”
(தொல். புறத். 16)
என்னும் புறத்திணையியல் அடி, பார்ப்பார் தாமே தமக்குள் செய்துவந்த அறுவகை ஆரிய வைதிகத் தொழில்களைக் குறிக்குமேயன்றித் தமிழரிடம் செய்துவந்த வினைகளைக் குறியா.
பார்ப்பார் தமிழரிடம் செய்த தொழில்களைக் கூறும் தொல்காப்பிய நூற்பாக்களாவன :
கற்பியல் :
"காமநிலை யுரைத்தலும் தேர்நிலை யுரைத்தலும் கிழவோன் குறிப்பினை எடுத்துக் கூறலும்
ஆவொடு பட்ட நிமித்தங் கூறலும்
செலவுறு கிளவியும் செலவழுங்கு கிளவியும் அன்னவை பிறவும் பார்ப்பார்க் குரிய”
"தோழி தாயே பார்ப்பான் பாங்கன்
யாத்த சிறப்பின் வாயில்கள் என்ப” செய்யுளியல் :
"பார்ப்பான் பாங்கன் தோழி செவிலி
களவிற் கிளவிக் குரியர் என்ப.
"
(36)
(52)
""
(181)