உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 15.pdf/185

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பண்டைத் தமிழகம்

"பேணுதரு சிறப்பிற் பார்ப்பான் முதலா

167

முன்னுறக் கிளந்த அறுவரொடு தொகைஇத்

தொன்னெறி மரபிற் கற்பிற் குரியர்.’

(182)

"பார்ப்பார் அறிவர் என்றிவர் கிளவி

யார்க்கும் வரையார் யாப்பொடு புணர்ந்தே."

(189)

மரபியலிற் கூறிய அந்தணர், நாற்பாலாருள் ஒரு பாலா ரான தமிழ முனிவரும், முனிவர்போலியரான ஒருசில ஆரியருமேயன்றிப் பார்ப்பாரல்லர். பால்வேறு, குலம்வேறு. அந்தணர், அரசர், வணிகர், வேளாளர் என்பன பால்கள். "வேற்றுமை தெரிந்த நாற்பாலுள்ளும் ' என்று புறநானூறு கூறுதல் காண்க. பிள்ளை, முதலியார், மறவர், இடையர் என்பன குலங்கள். பார்ப்பார் என்பது ஒரு குலம். பார்ப்பாரைக் குறிக்கும்போதெல்லாம் பார்ப்பார் என்ற குலப்பெயர் குறித்தே கூறுவர் தொல்காப்பியர். அந்தணர்,ஐயர், அறிவர், தாபதர் என்னும் பெயர்களெல்லாம் முனிவரைக் குறிக்கும்.

கற்பியலில், திருமண வினையைப்பற்றி நான்கு நூற் பாக்கள் உள்ளன. அவையாவன :

"கற்பெனப் படுவது கரணமொடு புணரக்

கொளற்குரி மரபிற் கிழவன் கிழத்தியைக்

கொடைக்குரி மரபினோர் கொடுப்பக்கொள் வதுவே."

(1)

"கொடுப்போர் இன்றியும் கரணம் உண்டே புணர்ந்துடன் போகிய காலை யான்.

""

“மேலோர் மூவர்க்கும் புணர்ந்த கரணம் கீழோர்க் காகிய காலமும் உண்டே.

""

"பொய்யும் வழுவும் தோன்றிய பின்னர் ஐயர் யாத்தனர் கரணம் என்ப.

""

(2)

(3)

(4)

இவற்றுள் பார்ப்பனர் பெயரே யில்லை. கரணமென்பது திருமண வினையைமட்டும் குறிக்கும்; இக்காலத்துப் பார்ப்பனராற் செய்யப்படும் ஆரியமந்திரச் சடங்கைக் குறியாது. நச்சினார்க் கினியர் திருமண வினைக்குக்

காட்டாகக்

கூறிய

செய்யுள்

வருமாறு: