168
ஒப்பியன் மொழிநூல்
"உழுந்து தலைப்பெய்த கொழுங்களி மிதவைப் பெருஞ்சோற் றமலை நிற்ப நிறைகாற் றண்பெரும் பந்தர்த் தருமணன் ஞெமிரி மனைவிளக் குறுத்து மாலை தொடரிக் கனையிரு ளகன்ற கவின்பெறு காலைக் கோள்கா னீங்கிய கொடுவெண் டிங்கட் கேடில் விழுப்புகழ் நாள்தலை வந்தென உச்சிக் குடத்தர் புத்தகன் மண்டையர் பொதுசெய் கம்பலை முதுசெம் பெண்டிர் முன்னவும் பின்னவும் முறைமுறை தரத்தரப் புதல்வற் பயந்த திதலையவ் வயிற்று வாலிழை மகளிர் நால்வர் கூடிக் கற்பினின் வழாஅ நற்பல வுதவிப் பெற்றோற் பெட்கும் பிணையை யாகென
நீரொடு சொரிந்த வீரித ழலரி
பல்லிருங் கதுப்பின் நெல்லொடு தயங்க
வதுவை நன்மணங் கழிந்த பின்றை.....
(அகம்.86)
இச்செய்யுளில் பார்ப்பனர் தொழில் சிறிதுமின்மை காண்க.
'பொய்யும் வழுவும்' என்னும் நூற்பாவில், பொய் என்றது ஒருவன் ஒருத்தியை மணந்தபின், அவளை மணந்திலேன் எனலை. வழுவென்றது ஒருத்தியை மணந்தபின் பிறரறியக் கைவிடலை. ஐயர் தமிழ முனிவர். தொல்காப்பியர் காலத்தில் பார்ப்பாருக்கு ஐயர் என்னும் பெயர் வழங்கவில்லை. 'என்ப' என்று பிறர்வாய்க் கேள்வியாக, அல்லது நூல்வா யறிவாகத் தொல்காப்பியர் குறித்திருப்பது. தமிழர் கரணத் தோற்றத்தின் தொன்முது பழைமையைக் காட்டும். அப்போது ஆரியக்குலம் இந்தியாவில் இல்லவேயில்லை. பொய்யும் வழுவும் சிறுபான்மைத் தமிழரா லேயே நிகழ்ந்தன. ஆயினும், பெண்டிர்க்குப் பொதுப்படக் காப்புச் செய்யும் பொருட்டுக் கரணம் வகுக்கப்பட்டது. மலையாள நாட்டில் வழங்கும்
மருமக்கட்டாயமும் பெண்களின் பாதுகாப்பிற் கேற்பட்டதே.
66
பாங்கன் நிமித்தம் பன்னிரண்டு" என்பதற்கு, இளம் பூரணர்
உரைத்த உரையாவது :