உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 15.pdf/192

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

174

ஒப்பியன் மொழிநூல்

கட்டிக் கூறிவிட்டார். இதற்கு முதலிரு கழக நூல்களும் அழிக்கப் பட்டுப் போனமையும், தமிழிலக்கியத்திற்கு ஆரிய மூலம் காட்டப் பட்டமையும் பிற்காலத் தமிழர்க்கு வரலாற்றுணர்ச்சி அற்று விட்டதுமே, கரணியமாகும்.

ஆங்கிலக் கல்வியும் அறிவியலாராய்ச்சியும் மிக்க இக் காலத்திலேயே பிறப்பொடு தொடர்புற்ற ஆரியக்குலப் பிரிவுபற்றி, தமிழத் தமிழ்ப் புலவர்க்கில்லாத தனியுயர்வு பிராமணத் தமிழ்ப் புலவர்க்கேற்படின்; ஏதிலரை நம்பி எளிதில் ஏமாறும் பழங்குடிப் பேதைமையும், வரலாற்றொடு கூடிய ஒப்பியன் மொழிநூ றிவின்மையும், மிக்க பண்டைக் கால அல்லது இடைக்காலத் தமிழரிடை ஐரோப்பியரை யொத்த வெள்ளை நிறமும் வல்லோசை மிக்க மந்திரமுங் கொண்டிருந்த வேத ஆரியர்க்கு எத்துணைப் பெருங் கண்ணியம் ஏற்பட்டிருத்தல் வேண்டும்!

தொல்காப்பியர்காலத் தமிழ்நூல்களும் கலைகளும்

தொல்காப்பியர் காலத்தில், தமிழிற் பல கலைகளும் நூல்களு மிருந்தனவேனும், அவற்றுள், தொல்காப்பியந் தவிர வேறொன்றும் அகப்படாமையான், பண்டைத் தமிழ்க் கலை களைப்பற்றி விரிவா யெடுத்துரைக்க இயலவில்லை. ஆயினும், ஆனை யடிச்சுவடு கண்டு ஆனை சென்றதை யறிதல் போல, தொல்காப்பியத்தில் ஆங்காங்குள்ள சில குறிப்புகளினின்று, தொல்காப்பியர் காலத்தில் எவ்வெக் கலைகள் தமிழிலிருந்தன வென்று இங்கெடுத்துக் கூறுகின்றேன்.

(1) இலக்கணம்

தொல்காப்பியர் காலத்தில் தமிழில் இலக்கணமிருந் தமைக்குத் தொல்காப்பியம் ஒன்றே போதிய சான்றாம். தொல்காப்பியரின் உடன் மாணவரான அவிநயனார், காக்கை பாடினியார் முதலிய பிறரும் தமிழிலக்கண மியற்றினதை யாப்பருங்கல விருத்தியுரையா லறியலாம்.

பிறமொழி யிலக்கணங்களெல்லாம் எழுத்து, சொல், யாப்பு, அணி என நான்கு பிரிவே யுடையன. ஆனால், தமிழோ அவற்றுடன் பொருள் என்னும் சிறந்த பிரிவையுமுடையது. யாப்பு, அணி என்பவற்றைப் பொருளில் அடக்கித் தமிழிலக் கணத்தை மூன்றாகப்