பண்டைத் தமிழகம்
175
பகுப்பதே பண்டை வழக்கம். யாப்பும் அணியும் ஒரு செய்ளின் பொருளை யுணர்தற்குக் கருவி ராதலின், அவற்றைப் பொருளிலக்கணத்தினின்றும் பிரிக்கக் கூடாதென்பது முன்னோர் கருத்து. யாப்பருங்கலம், யாப்பருங் கலக் காரிகை என்பவை, தொல்காப்பியத்திற் கூறப்படாத, செய்யுளிலக்கணங்களைக் கூறுவதற்குத் தனிநூல்களா யெழுந்தனவேயன்றி, மூன்றாயிருந்த தமிழிலக்கணப் பிரிவை நான்காக்குவதற்கன்று.
ம்
தமிழிலுள்ள பொருளிலக்கணத்தை இற்றைத் தமிழர் சரியா யுணரவில்லை. பார்ப்பனரோ அவரினும் உணரவில்லை. பண்டைத் தமிழர் மதிநுட்பமெல்லாம் பழுத்துக்கிடப்பது பொருளிலக்கணம் ஒன்றில்தான். ஒரு மக்களின் நாகரிகத்தைக் காட்டச் சிறந்த சின்னம் மொழியென்று முன்னர்க் கூறப்பட்டது. பல கருத்துகளையும் தெரிவிப்பதற்குரிய சொற்களும் சொல் வடிவங்களும், விரிவான இலக்கியமும் ஒருமொழியின் சிறப்பைக் காட்டும். இலக்கியத்தினும் இலக்கணம் சிறந்தது. இலக்கணத்திற் சிறந்தது தமிழ்மொழி ஒன்றே. ஆகையால் உலகமொழிகள் எல்லாவற்றினும் தமிழே மிகத் திருந்திய தென்பதற்கு எள்ளளவும் ஐயமில்லை.
எழுத்தாற் சொல்லும் சொல்லாற் பொருளும் உணரப்படும். எழுத்து, சொல் என்பவற்றின் கூறுபாடுகளும் இயல்புகளும், அவற்றைச் செவ்வையா யுணர்தற்கு எங்ஙனம் பயன்படுமோ, அங்ஙனமே பொருளின் கூறுபாடும் அதன் இயல்புகளும் பொருளைச் செவ்வையா யுணர்தற்குப் பயன்படும்.
பொருளிலக்கணம் ஒன்றையே இலக்கணமாகவும், ஏனை எழுத்தும் சொல்லும் அதற்குக் கருவிகளாகவும் கொண்டனர் முன்னோர். இதை,
பாண்டிய "அரசனும் புடைபடக் கவன்று, 'என்னை? எழுத்துஞ் சொல்லும் ஆராய்வது பொருளதிகாரத்தின் பொருட் டன்றே! பொருளதிகாரம் பெறேமெனின், இன வை பெற்றும் பெற்றிலேம்'....' எனக் கூறியதால் அறியலாம்.
பொருளிலக்கணம் வீடும், எழுத்திலக்கணமும் சொல்லிலக் கணமும், முறையே அதற்குட் செல்ல வழியாயிருக்கும் வாயிலும் நடையும் போல்வன.
9
இறை. (ப), ப. 8, 9