180
ஒப்பியன் மொழிநூல்
தனித்தொலிப்பதும்
ணைந்தொலிப்பதும்பற்றி,
நேரசை நிரையசையென்றும், அவை குற்றியலுகரத்தொடு கூடிவருதல் பற்றி, நேர்பு அசை நிரைபு அசை என்றும் நான்காக வகுத்தனர். இவற்றுள் முன்னவை இயலசை; பின்னவை உரியசை.
செய்யுள்களில் வெண்பா, கலிப்பா என்னும் பாக்களும் அவற்றின் வகைகளும் பிறமொழிகட்கில்லை.
செப்பலோசைக்கு வெண்பாவும்,
அகவலோசைக்கு
ஆசிரியமும் துள்ளலோசைக்குக் கலிப்பாவும், தூங்கலோசைக்கு வஞ்சியும் சிறந்தனவென்று கண்டு பிடித்ததும், அகவலை நூற்பாவிற்கும், கலியையும் அதன் வேறுபாடாகிய பரிபாட லையும் அகப்பொருட்கும், அம்போதரங்க வொத்தாழிசைக் கலி, கொச்சக வொருபோகு முதலிய கலிவகைகளைக் கடவுள் வா கடவுள் வாழ்த்திற்கும் மருட்பாவைக் கைக்கிளைக்கும் உரிமையாக்கினதும், தமிழரின் சிறந்த மதிநுட்பத்தையும் நுண்ணிய செவிப்புலனையுங் குறிப்பனவாகும். செப்பல் விடையிறுத்தல். அகவல் - ஒருவரை விளித்துக் கூறல். கலிப்பாவின் சிறப்பைக் கலித்தொகையிற் கண்டறிக.
—
எப்பொருளுக்கும் ஏற்ற ஓசையிற் செய்யுள் செய்வதும், பலவகை வண்ணங்களிற் பாடுவதும், சொற்செறிவும், சிறப்பாயுரியன. தமிழ் யாப்புமுறை மிகமிக விரிவானது.
தமிழுக்கே
தமிழ்ச் செய்யுள்களில் மிகச் சிறந்தது கலிப்பாவாகும். அதன் வகை யிரண்டற்கு இங்குக் காட்டுத் தருகின்றேன்.
(திருமால் வாழ்த்து)
(1) அம்போதரங்க வொத்தாழிசைக்கலி
தரவு
"கெடலரு மாமுனிவர் கிளர்ந்துடன் றொழுதேத்தக் கடல்கெழு கனைசுடரிற் கலந்தொளிறும் வாறுளைஇ யழல்விரி சுழல்செங்க ணரிமாவாய் மலைந்தானைத் தாரோடு முடிபிதிரத் தமனியப் பொடிபொங்க வார்புனலி னிழிகுருதி யகலிட முடனனைப்பக் கூருகிரான் மார்பிடந்த கொலைமலி தடக்கையோய்;