பண்டைத் தமிழகம்
தாழிசை 1
முரசதிர வியன்மதுரை முழுவதூஉந் தலைபனிப்பப் புரைதொடித் திரடிண்டோட் போர்மலைந்த மறமல்ல ரடியோடு முடியிறுப்புண் டயர்ந்தவ ணிலஞ்சேரப் பொடியெழ வெங்களத்துப் புடைத்ததுநின் புகழாமோ;
2
கலியொலி வியனுலகங் கலந்துட னனிநடுங்க வலியிய லவிராழி மாறெதிர்ந்த மருட்சோர்வு மாணாதா ருடம்போடு மறம்பிதிர வெதிர்கலங்கச் சேணுய ரிருவிசும்பிற் செகுத்ததுநின் சினமாமோ;
3
படுமணி யினநிரைகள் பரந்துட னிரிந்தோடக் கடுமுர ணெதிர்மலைந்த காரொலி யெழிலேறு வெரினொடு மருப்பொசிய வீழ்ந்துதிறல் வேறாக வெருமலி பெருந்தொழுவி னிறுத்ததுநின் னிகலாமோ;
பேரெண்
இலங்கொளி மரகத வெழின்மிகு வியன்கடல்
வலம்புரித் தடக்கை மாஅ னின்னிறம்;
விரியிணர்க் கோங்கமும் வெந்தெரி பசும்பொனும் பொருகளி றட்டோய் புரையு நின்னுடை;
சிற்றெண்
கண்கவர் கதிர்மணி கனலுஞ் சென்னியை; தண்சுட ருறுபகை தவிர்த்த வாழியை; ஒலியிய லுவண மோங்கிய கொடியினை;
வலிமிகு சகட மாற்றிய வடியினை:
இடையெண்
"போரவுணர்க் கடந்தோய்நீ;
புணர்மருதம் பிளந்தோய்நீ;
நீரகல மளந்தோய்நீ;
நிழறிகழைம் படையோய்நீ;
181