உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 15.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

மலையாளத்தில் மாப்பிள்ளை என்றும், நால் வகை யாகச் சொல்லப்படும் முகமதியரெல்லாம், தோற்றத்தால் வேறுபட்டுக் காணினும், பிறப்பால் தமிழ்நாட்டுக் கிறிஸ்த வரைப்போலத் தமிழர் அல்லது திராவிடரேயாவர்.

தெலுங்கைத் தாய்மொழியாகக்கொண்டுள்ள நாயுடு, ரெட்டி, கோமுட்டி, சக்கிலியர் முதலிய வகுப்பார், இக்கால மொழி முறைப்படி தமிழராகக் கருதப்படாவிடினும்,தமிழருக்கு நெருங்கின இனத்தாராவர். இவர் விஜயநகர ஆட்சிக் காலத்தில் நாயக்க மன்னருடன் ஆந்திர நாட்டினின்றும் தமிழ்நாட்டிற்கு வந்தவராவர். மலையாளம், கன்னடம், துளு முதலிய பிற திராவிட மொழிகளைப் பேசும் அப் பார்ப்பனரும் தமிழருக்குத் தெலுங்கரைப் போல் இனத்தாராவர்.

ஆரியரும் திராவிடரும் வடநாட்டிற் பிரிக்க முடியாதவாறு கலந்துபோனாலும். அங்கும் பிராமணர் மட்டும் தொன்று தொட்டுத் தங்கள் குலத்தைக் கூடியவரை தூய்மையாய்க் காத்துவந்ததாகவே தெரிகின்றது.

பார்ப்பனர் ஆரியர் என்பதற்குச் சான்றுகள்

(1) உருவம் — நிறம் : பார்ப்பனர் வடக்கேயுள்ள குளிர் நாட்டினின்றும் வந்தவராதலின், தமிழ்நாட்டிற்கு வந்த புதிதில் மேனாட்டாரைப்போல் வெண்ணிறமாயிருந்தனர்; பின்பு வெயிலிற் காயக் காயச் சிறிது சிறிதாய் நிறமாறி வருகின்றனர்.

'கருத்தப் பார்ப்பானையும் சிவத்தப் பறையனையும் நம்பக்கூடாது' என்பது பழமொழி. பார்ப்பனருக்குரிய நிறம் வெள்ளையென்பதும், வெயிலிற்காயும் பறையனுக்குரிய நிறம் கருப்பென்பதும் இவர் இதற்கு மாறான நிறத்தினராயிருப்பின் அது பிறவிக்குற்றத்தைக் குறிக்குமென்பதும் இதன் கருத்து.

குடுமி : பண்டைத் தமிழருள் ஆடவர் (புருஷர்) குடுமி வைத்திருந்தனரேனும், பார்ப்பனரைப்போல மிகச் சிறிய உச்சிக் குடுமி வைத்திருந்ததாகத் தெரியவில்லை. பெண்டிர் இன்று போலத் தலைமயிர் முழுவதையும் வளரவிட்டனர். ஆடவர் சுற்றிவரச் சிறிது ஒதுக்கிக்கொண்டனர். ஆடவர் முடி சிறிதாயும் பெண்டிர் முடி பெரிதாயுமிருந்ததினால், இவை முறையே குஞ்சி யென்றும்