பண்டைத் தமிழகம்
"தாவில் கொள்கைத் தத்தம் கூற்றைப்
பாகுபட மிகுதிப் படுத்தல்.
""
அகத்தியத் தருக்க நூற்பாக்கள்
227
(தொல். புறத்.15)
கீழ்வரும் நூற்பாக்கள் தருக்கப் புலவர் வடிவேல் செட்டியார் பதிப்பித்த ‘தர்க்க பரிபாஷை' என்னும் நூலிறுதியிற் கண்டவை. இவை உண்மையில் அகத்தியர் இயற்றியவையாயின், தொல்காப்பியர் காலத்தில் தருக்கநூலுந் தமிழிலிருந்தமை யறியப்படும்.
1. பொருள்குணங் கருமம் பொதுச்சிறப் பொற்றுமை யின்மை யுடன்பொரு ளேழென மொழிப.
2. மண்புன லனல்கால் வெளிபொழு தாசை யான்மா மனதோ டொன்பதும் பொருளே.
3. வடிவஞ் சுவையிரு நாற்ற மூறெண் ணளவு வேற்றுமை புணர்ச்சி பிரிவு முன்மை பின்மை திண்மை நெகிழ்ச்சி சிக்கென லோசை யுணர்ச்சி யின்பந் துன்பம் விருப்பம் வெறுப்பு முயற்சி யறமறம் வாதனையொடு குணமறு நான்கே. 4. எழும்பல் விழுதல் வளைத னிமிர்த னடத்த லுடனே கருமமை வகைத்தே. 5. பொதுமை மேல்கீ ழெனவிரு வகையே. 6. மன்னிய பொருளின் கண்ணவா யவற்றின் வேற்றுமை தெரிப்பன பலவாஞ் சிறப்பே. 7. ஒற்றுமை யாப்பஃ தொன்றே யென்க. 8. முன்னின்மை பின்னின்மை முற்று மின்மை யொன்றினொன் றின்மையென் றின்மை நான்கே
9. மண்ணீ ரனல்கான் முறையே நாற்றந் தட்பம் வெப்ப மூற்ற மாகி
மெய்ப்பொரு ளழிபொருண் மேவு மென்க.
10. அணுக்கண் மெய்ப்பொருள் காரிய மழிபொருள் பிருதிவி நித்திய வநித்திய வணம்பெறும் நிலையணுப் பொருணிலை யில்லது காரியம்.