உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 15.pdf/246

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

228

11. அதுவே:

உடல்பொறி விடய மூவகைப் படுமே நம்மனோர் யாக்கை மண்கூற் றுடம்பு நாற்றங் கவர்வது நாசியி னுனியே மண்கல் முதலிய விடய மாகும். 12. நீரிறை வரைப்பிற் கட்டு நீ ருடம்பு சுவைதிறங் கவர்வது நாவி னுனியே கடல்யா றாதி விடய மாகும்.

ஒப்பியன் மொழிநூல்

13.கதிரோன் வரைப்பிற் கட்டன லுடம்பே யுருவங் கவர்வது கருமணி விழியே மண்விண் வயிறா கரநால் விடயம். 14. வளியிறை வரைப்பிற் கட்டுகா லுடம்பே யூற்றங் கவர்வது மீந்தோ லென்க விடய மரமுத லசைதற் கேதுவே பிராண னுடலகத் தியங்குங் காற்றே.

15. விசும்பே காலந் திசையோ டான்மா மனமிவை யைந்து நித்தியப் பொருளே. 16. ஓசைப் பண்பிற் றாகா யம்மே. 17. இறப்புமுதல் வழக்கிற் கேதுக் காலம். 18. கிழக்குமுதல் வழக்கிற் கேதுத் திசையே. 19. அறிவுப் பண்பிற் றான்மா வென்க

விறையே யீசன்முற் றறிவனோர் முதலே யுயிர்தா னுடறொறும் வெவ்வே றாகும். 20. மனமணு வடிவாய் வருமின் பாதி யறிதற் கின்றி யமையாக் கருவி யாகிப் பலவா யழிவின் றுறுமே.

இந் நூற்பாக்களையே, நுண்ணறிவுள்ள ஒருவர் ஒரு நூலாக விரித்துவிடலாம்.

இந் நூற்பாக்கள் சிறப்பிக முறையைச் சேர்ந்தவை. சிறப் பிகம் (வைசேடிகம்), முறையிகம் (நியாயம்) என்னும் இருவகைத் தருக்க முறைகளுள், முன்னதே சிறந்ததென்க.

சிற்பம் (Architecture)

தொழிற்கலைகள் (Arts)

“முழுமுதல் அரணம்” (புறத். 8), “ஆரெயில்” (புறத். 10), "மதிற்குடுமி” (புறத். 10) முதலிய குறிப்புகளால், தொல்காப்பியர்