உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 15.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

20

ஒப்பியன் மொழிநூல்

இவற்றுள், சோமம் என்பது மயக்கந்தரும் ஒருவகைக் கொடிச்சாறு; உஷா என்பவள் விடிகாலையின் உருவகம்.

(6) கருத்து: பிறப்பால் சிறப்பென்பதும், பிரமாவே மக்களைப் பிராமணர், க்ஷத்திரியர், வைசியர், சூத்திரர் என நால்வகையாகப் படைத்தார் என்பதும், சூத்திரனுக்கு உயர்தரக் கல்வியும் துறவறமும் இல்லையென்பதும், ஆன் (பசு) தெய்வத் தன்மையுள்ளதென்பதும். உழவு தாழ்ந்த தொழில் என்பதும், துன்பகாலத்தில் ஒழுக்கந் தவறலாம் என்பதும் ஆரியக் கருத்து களாகும்.

தமிழர் ஆவைப் பயன் தருவதென்று பாராட்டினரே யொழியத் தெய்வத்தன்மை யுள்ளதென்று கொள்ளவில்லை.

உழவை,

"சுழன்றுமேர்ப் பின்ன துலகம் அதனால் உழந்தும் உழவே தலை

என்றும்,

66

22

“உழுதுண்டு வாழ்வதற் கொப்பில்லை கண்டீர் பழுதுண்டு வேறோர் பணிக்கு

22

என்றும் உயர்த்துக் கூறுவர் தமிழர். ஆனால், ஆரியரோ,

(குறள்.1031)

(நல்வழி. 12)

"சிலர் பயிரிடுதலை நல்ல தொழிலென்று நினைக்கின்றனர். அந்தப் பிழைப்புப் பெரியோர்களால் பழிக்கப்பட்டது. ஏனெனில், இரும்பை முகத்திற்கொண்ட கலப்பையும் மண்வெட்டியும், நிலத்தையும் நிலத்திலுள்ள பல உயிர்ப்பொருள்களையும் வெட்டு கின்றனவல்லவா?' (மனு. 10 : 84) என்று இழித்துக் கூறுவர்.

66

ஆரியர் தொல்லகம்

ஆரிய வரணத்தின் தொல்லகம் ஆசியாவிலன்று, பால்டிக் நாடுகளிலும் காண்டினேவிய நாட்டிலுமே யிருந்தது. அங்கே ஆரிய மொழிகள் எழுந்தன. அவற்றை வழங்கிய உயரமான, நீலக்கண்ணும் வெளுத்த மயிரும் வாலமுகமுங்கொண்ட மக்கள் அங்குநின்றும் பரவினபோது, அம்மொழிகளும் அவர்களுடன் பரவின. அவர்கள் மணக்கலப்பாலேயே, தங்கட்கு இனமாகவும் அயலாகவுமுள்ள மக்கள்மேல், தங்கள் தலைமையையும் மொழிகளையும் ஏற்றுவதில்