உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 15.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முன்னுரை

21

உள்ள

வெற்றி பெற்றார்கள். இந்தியாவிலும் ஐரானிலும் கீழையாரியர், ஆரிய வரணத்தின் கடைசியும் மிகச்சேய்மையுமான கிளையினராவர். அவர்கள் பெரிய ஆற்றொழுக்கங்களைப் பின்பற்றி வந்து, கடைசியில் பஞ்சாப்பில் தங்கினார்கள்," என்று முதலாவது லத்தாம் (Latham) எடுத்து விளக்கி, பின்பு மாந்தனூலும் (Anthropology) மொழிநூலும் பற்றிய சான்றுகளால், பொயஸ்கே (Poesche)யும் பெங்கா (Penka)வும் திறம்படத் தாங்கிய கொள்கையை நான் முற்றும் ஒப்புக் கொள்ளுகிறேன்”” என்று சாய்ஸ் (Sayce) கூறுகிறார்.

"மொழியின் கூற்றுகளை நன்றாய் ஆராயும்போது, அவை கதையை மிக வேறுபடக் கூறுகின்றன. ஆதி ஆரியன் உண்மையாகவே முரட்டுத்தன்மையுள்ள துப்புரவற்ற மிலேச்சனாய், கடுங்குளிரினின்றும் தன்னைக் காத்துக்கொள்ளக் காட்டு விலங்குகளின் தோலை யுடுத்திக்கொண்டும், உலோகத்தைப் பயன்படுத்தத் தெரியாமலும் இருந்தான்" என்று, ஆட்டோ சிரேதர் (Otto Schrader) கூறுகின்றார்.'

ஆரியர் வருகை

ஆரியர்கள் இந்தியாவிற்கு வந்து, முதலாவது சிந்தாற்றுப் பாங்கில் தங்கினார்கள். சிந்து என்றால் ஆறு என்பது பொருள். ஆற்றுப் பெயர், முதலாவது அது பாயும் நாட்டிற்கும், பின்பு ஆரியர் வடஇந்தியாவிலும் தென்னிந்தியாவிலும் பரவின பின், இந்தியா முழுமைக்கும் ஆயிற்று. பாரசீகர், சகரத்தை ஹகரமாக ஒலிக்கும் தங்கள் வழக்கப்படி, சிந்து என்பதை 'ஹிந்து' என்று மாற்றினார்கள். பின்பு மறுபடியும் கிரேக்கர் அதை 'இந்தி' என்று திரித்தார்கள். கடைசியில் ஆங்கிலேயரால் 'இந்தியா' என்று அழைக்கப்பட்டு வருகிறது.

ஆரியர்கள் இந்தியாவிற்கு வந்தபோது முல்லை நாகரிகத்தையே அடைந்திருந்தார்கள். மாந்தன் நாகரிகம் குறிஞ்சி, முல்லை, மருதம், நகர் என நான்கு நிலைகளைக் கொண்டது. தோலை உ உடுப்பதும்,

2 Principles of Comparative Philology, Preface to the Third Edition, p.p.xvili - xix. 3"மிலேச்சர் ஆரியர்” என்ற திவாகரச் சூத்திரமும் இங்குக் கவனிக்கத்தக்கது.