உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 15.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

22

4

ஒப்பியன் மொழிநூல்

பரண்களிலும் குடில்களிலும் உறைவதும், பன்றி கிழங்கக விடத்தில் தினைபோன்ற ற கூலம் விதைத்து மழைநீரால் (வானவாரியாக) விளையச் செய்வதும் குறிஞ்சி நாகரிகமாகும். ஆடுமாடுகளை வளர்த்து அவற்றின் ஊனையும் பாலையும் உண்பதும், சோளம் கம்பு போன்ற புன்செய்ப் பயிர்களை விளைப்பதும், ஆட்டு மயிராடை உடுப்பதும், சிற்றில்களில் உறைவதும் முல்லை நாகரிகமாகும். நெல், கரும்பு முதலிய நன்செய்ப் பயிர்களை விளைப்பதும், நிலையாக ஓரிடத்திற் குடியிருப்பதும், பஞ்சாடை யுடுப்பதும், தங்கள் பொருட்காப்பிற்குக் காவற் காரனை ஏற்படுத்துவதும் மருத நாகரிகமாகும். வாணிபமும், அரசியலும், கல்வியும் தோன்றி, முன்பு ழவரென்னும் ஒரே வகுப்பாராயிருந்தவர் வேளாளர், வணிகர், அரசர், அந்தணர் என்னும் நாற்பாலாய்ப் பிரிவதும், பின்னர்க் கொல், நெசவு முதலிய மேல் தொழில்கட்கும், சலவை, மயிர்வினை முதலிய கீழ்த் தொழில்கட்கும் மக்கள் பிரிந்து போவதும், மாளிகைகள் தோன்றுவதும், ஓவிய உணர்ச்சி உண்டாவதும் இசையும் நாடகமும் சிறப்பதும், வழிபாடுகளா யிருந்தவை மதங்களாக வளர்வதும் நகர நாகரிகமாகும். நகரத்தில்தான் நாகரிகம் சிறப்பாய்த் தோன்றிற்று. நாகரிகம் என்னும் சொல்லும் நகர் என்பதினின்றும் பிறந்ததே. (நகர் -நகரகம் - நகரிகம் - நாகரிகம்). ஆங்கிலத்திலும் இங்ஙனமே (civilise, from civitas (L) = city).

ஆரியர்கள் ஆடுமாடுகளை மேய்த்துக்கொண்டும், ஆவை (பசுவை)த் தங்களுக்குச் சிறந்த சார்பாகக் கொண்டும், இந்திரன், வருணன் முதலிய சிறு தெய்வங்களுக்குப் பல விலங்குகளைப் பலியிட்டுக்கொண்டும், அடிக்கடி இடம் பெயர்ந்து கொண்டும், உழவுத்தொழிலைச் சிறுபான்மையே செய்துகொண்டும், மாடு பன்றி முதலியவற்றின் இறைச்சியை உண்டுகொண்டும் இருந்ததை, ஆரிய வேதங்களினின்றும் தரும நூல்களினின்றும் அறிகின்றோம்.

கோத்ர (வமிசம்) என்னும் சொல் மாட்டுக் கொட்டில் என்றும், துஹித்தி (மகள்) என்னும் சொல் பால் கறப்பவள் என்றும், பொருள்படுவது, ஆரியர் இந்தியாவிற்கு வந்த போது முல்லை நாகரிகத்தினரே என்பதைக் காட்டும்.

4 புறம். 168