72
ஒப்பியன் மொழிநூல்
"உயர்திணைப் பெயரே அஃறிணைப் பெயரென் றாயிரண் டென்ப பெயர்நிலைச் சுட்டே
என்று புணரியலிற் கூறியதை,
"உயர்திணை யென்மனார் மக்கட் சுட்டே அஃறிணை யென்மனார் அவரல பிறவே'
என்று கிளவியாக்கத்துள்ளும்,
"இடைப்படிற் குறுகும் இடனுமா ருண்டே
கடப்பா டறிந்த புணரிய லான
என்று மொழிமரபிற் கூறியதை,
""
"வல்லொற்றுத் தொடர்மொழி வல்லெழுத்து வருவழித் தொல்லை யியற்கை நிலையலு முரித்தே.
என்று குற்றியலுகரப் புணரியலுள்ளும் கூறியிருப்பதைக் காண்க.
நச்சினார்க்கினியர் எவ்வளவோ தமிழ்ப்பற்றும் தமிழறிவும் உடையவராயிருந்தும், இங்குத் தவறிவிட்டது தமிழியல்பை அறியாததினாலேயே.
இனி, சுப்பிரமணிய சாத்திரியார் தொல்காப்பியச்
சொல்லதிகாரக் குறிப்பு என்றும், தொல்காப்பிய எழுத்ததிகாரக் குறிப்பு என்றும் இரு நூல்கள் வெளியிட்டுள்ளார். அவற்றுள், சொல்லதிகாரக் குறிப்பு மன்னார்குடிச் சோமசுந்தரம்பிள்ளை யவர்களால் சின்னபின்னமாகச் சிதைக்கப்பட்டது. ஆயினும், அதைப் பல்கலைக்கழகத்தாரேனும் பண்டிதர்களேனும் சிறிதும் கவனித்தாரில்லை. இதை நினைக்கும்போது "குட்டுதற்கோ" என்ற செய்யுளே நினைவிற்கு வருகின்றது. இனி, எழுத்ததிகாரக் குறிப்பில், தொல்காப்பியர் வடமொழிப் பிராதிசாக்கியங்களைப் பின்பற்றித் தொல்காப்பியத்திற் பிறப்பியலை வரைந்ததாகக் கூறியுள்ளார். எல்லா மொழிகட்கும் பல எழுத்துகள் பொதுவா யிருக்கின்றன. அவ் வெழுத்துகளெல்லாம் யார் ஒலித்தாலும், அததற்குரிய
ஒரேயிடத்தில்தான் பிறக்கும்.
ஆங்கில
லக்கணிகள், இந்திய இலக்கணிகளைப்போல நூற்பா வடிவாக எழுதாவிடினும், உரைநடையில், எழுத்துகளின்