உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 15.pdf/91

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முன்னுரை

73

வகைகளையும் அவற்றின் பிறப்பியல்புகளையும் நுட்பமாக வும், விரிவாகவும் எழுதித்தான் வைத்திருக்கிறார்கள். அவர்கள் தொண்டையின (Gutturals), அண்ணத்தின (Palatals), பல்லின (Dentals), உதட்டின (Labials) என்றவற்றையே, தமிழ் இலக்கணிகள் பின்பற்றிப் பிறப்பியல் வகுத்தார்கள் என்பது எவ்வளவு பொருந்துமோ, அவ்வளவே வடமொழி வழிகாட்டுவதும் பொருந்துவதாகும்.

தமிழிலக்கணம் மிகப் பழங்காலத்தில் இயறப்பட்டதினால், மிக விரிவாக வரையப்படவில்லை. அக்காலத்து மாணாக்கர் நுண்ணறிவுடையவரா யிருந்ததினாலும், எழுத்தாணியால் ஒலையிலெழுதுவது வருத்தமானதினாலும், விரிவாயெழுதின புத்தகம் சுமக்க முடியாத அளவு பெருத்துவிடுமாதலாலும், சுருங்கிய அளவில் மாணவர் மனப்பாடஞ்செய்ய எளிதாயிருக்கு மாதலாலும், அக்காலத்து ஆராய்ச்சிக் குறைவாலும், இக்காலத்திற் கேற்றபடி மிக விரிவாக இலக்கணம் எழுதப்படவில்லை. வட மொழியிலக்கணம் தமிழுக்குப் பிந்தினதாதலின் சற்று விரிவா யுள்ளது. ஆங்கில விலக்கணம் டமொழிக்கும் பிந்தினதாதலின், அதினும் விரிவாக வுள்ளது.

தொல்காப்பியத்தில், பதவியல் இலக்கணம் பலவியல்களில் பரவிக் கிடக்கின்றது. நன்னூலார் அவற்றையெல்லாம் தொகுத்து ஒரு தனியியலாக்கினார், அவர் இலக்கணத்துள்ளும், தொழிற் பெயர் விகுதிகளும், தன்வினை பிறவினையாகும் வகைகள் எல்லாமுங் கூறப்படவில்லை. இதையறியாத சிலர், வடமொழி யிலக்கணவறிவு தமிழிலக்கணவறிவிற்கு இன்றியமையாததென்று கூறுகின்றனர்.

ஆங்கில இலக்கணம் ஆறாயிர மைலுக்கப்பால் இயற்றப் பட்டதாயிருப்பினும், தமிழிலக்கண அறிவிற்கு எவ்வளவோ உதவுவதாகும்.

உதாரணமாக, அசையழுத்தம், காலப்பிரிவு, எழுவாய் வடிவுகள் முதலியவற்றைக் கூறலாம்.

(1) அசையழுத்தம் (Accent)

அசையழுத்தம் தமிழுக்கில்லையென்று சிலர் கூறுகின்றனர்.

டுப்பு (Acute),படுப்பு (Grave), நலிபு (Circumflex) என்னும் மூன்றொலிப்பு வேறுபாடுகளும் தமிழுக்குள்ளன வென் று