உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 15.pdf/92

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

74

ஒப்பியன் மொழிநூல்

நன்னூலார் கூறியிருக்கின்றனர். எந்த மொழியிலும், ஒரு சொல்லில் ஏதேனுமோர் அசையில் அழுத்தம் இருந்துதான் ஆக வேண்டும். அழுத்தமுள்ள அசை எடுப்பசை; அஃதில்லாதது படுப்பசை; இவ் விரண்டிற்கும் இடைப்பட்டது நலிபசை.

தமிழில் பொதுவாய் அசையழுத்தம் சொன் முதலிலிருக்கும். தண்ணீர், வந்தான் என்ற சொற்களை ஒலித்துக் காண்க.

சம்பொன்பதின்பலம் என்னுந் தொடர், செம்பைக் குறிக்கும்போது, செம் என்னும் முதலசையும், பொன்னைக் குறிக்கும்போது, பதின் என்னும் இடையசையும் அழுத்தம் பெறும்.

வந்தான், வந்தாள் போன்ற சொற்கள், கூறுவார் குறிப்பின் படி பாலைச் சிறப்பாய்க் குறிக்கும்போது, தான், தாள், என்னும் ஈற்றசைகள் அழுத்தம்பெறும்.

சில சொற்களின் ஈறுகள், அழுத்தம்பெற்றுப் பொருளை வேறுபடுத்தும்.

"உப்ப கார மொன்றென மொழிப

இருவயின் நிலையும் பொருட்டா கும்மே"

என்றார் தொல்காப்பியர்.

66

(மொழி.43)

இதன் உரையில், தபு என்னுஞ்சொல், படுத்துக்கூற நீ சாவெனத் தன்வினையாம்; எடுத்துக்கூற நீ ஒன்றனைச் சாவப்பண்ணெனப் பிறவினையாம்" என்று நச்சினார்க்கினியர் கூறியிருத்தல் காண்க.

ஆங்கிலத்தில், முன்காலத்தில் அளபுக் குறிகள் இருந்தன; இப்போது மறைந்துவிட்டன. அதனால், அதிலுள்ள அசையழுத்தம் அழுத்தம், நெடிலோசை என இரண்டையுங் குறிப்பதாகும். சில வினைப் பகுதிகள் முதலெழுத்து நீண்டு தொழிற்பெயராவ துண்டு. எ-டு : படுபாடு, உண்-ஊண்.

இங்ஙனமே conduct' என்னும் ஆங்கில வினையும், con'duct என முதல் நீண்டு தொழிற்பெயராகும். ஆனால், நெடிலைக் குறிக்க ஆங்கிலத்தில் இப்போது குறியின்மையால், அசை யழுத்தமே அதைக் குறிக்கின்றது. இங்ஙனமே convoy என்பது con'voy என நீண்டு தொழிற்பெயராதலுங் காண்க.