உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 16.pdf/127

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




தமிழ்மொழித் தோற்றம்

111

ஈறுகளின் முதலிலுள்ள அகரம் புணர்ச்சியிற் கெடுதல்

இயல்பே.

கா: சிவம்-அன் = சிவன்; மண + அம் = மணம்.

(5) சுட்டடியான உயிர்நெடில்கள் ல்கள் யகரமெய் சேர்ந்து வழங்கியிருக்கின்றன. பின்பு அவ் யகரம் நகரமாக மாறியிருக் கின்றது.

கா: ஏன் - யான் - நான். ஈ:-(யீன்) - நீன். ஆன் - (யான்) (நான்) தான்.

ஈ எ ஏ இன்றும் சொன்முதலில் வரின், யகரம் சேர்ந்தே பேச்சுவழக்கில் வழங்குகின்றன.

கா: யிடம், யீரம், யெழுத்து, யேடு.

யான் நான் என்னும் வடிவங்கள் தன்மையில் வருதலின் அவை மயக்கமின்மைப்பொருட்டுப் படர்க்கையில் விலக்கப் பட்டன. நகரத்திற்குத் தகரம் போலியாக வருமென்பது முன்னர்க் கூறப்பட்டது.

ஆகாரத்தோடும் யகரம் சேர்ந்து வருமென்பதை, yon (ஆண்), yonder (ஆண்டு + அர்) என்னுஞ் சொற்களானுணர்க.

(6) தான் தாம் என்னும் பெயர்கள் முதலாவது படர்க்கைச் சுட்டுப் பெயராயிருந்து, பின்பு அவன் அவர் முதலிய சுட்டுப் பெயர்கள் தோன்றியபின், படர்க்கைத் தற்சுட்டுப் பதிற்பெயர் (Reflexive Pronouns)களாக வழங்கி வருகின்றன.

தாங்கள் என்பது, என்பது, இன்று உயர்வு குறித்து முன்னிலை யொருமைக்கும் வழங்குகின்றது. இஃதோர் இடவழுவமைதி.

(7) மூவிடப் பெயர்களிலும் ம்

வினாப்பெயர்களிலும், எண்மட்டுங் குறித்தவை முந்தியன, பால் குறித்தவை பிந்தியன.

(8) பால் குறித்த சுட்டுப் பெயர்களையும் வினாப் பெயர்களையும் வேண்டியபோது, அவன் அவள் முதலியவாக, (பிற்காலத்து) இயல்பாகத் தோன்றிப் பால் காட்டாது வழங்கின சுட்டு வினாப் பெயர்களையே, முறையே ஆண்பால் முதலிய ஐம்பாற்