உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 16.pdf/128

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




112

சுட்டுவினாப் பெயர்களாகத் தமிழ்மக்கள்

ஒப்பியன் மொழிநூல் கொண்டதாகத்

தெரிகின்றது. அவற்றுள் வினாப் பெயரடிகள் நெடிலாகவும் வழங்கும்.

-

அவ் - அவ அவை. அவ - அ.

அவன் அவள் முதலிய சொற்கள் இயல்பாய்த் தோன்றியவை யென்பதும், அவை முதலாவது பால் காட்டவில்லையென்பதும், எவன் என்னும் பெயர் அஃறிணை யிருபால் வினாக்குறிப்பு வினைமுற்றாயும் ஆண்பால் வினாப்பெயராயு மிருத்தலானும், அவண என்பதன் திரிபான அவண் என்பதும் அதோள் உவள் என்பனவும் இடத்தைக் குறித்தலானும், அது என்னும் பெயர் சில வழக்குகளில் இருதிணைக்கும் பொதுவாயிருத்தலானும், அன் அர் என்னும் ஈறுகள் பால் காட்டியும் காட்டாமலும் அஃறிணைக்கும் வழங்குவதாலும் பிறவற்றாலும் அறியப்படும்.

அது என்னும் பெயர் உயர்திணைக்கும் வழங்குமாறு : யார் அது? கொற்றனது மகன்.

சுட்டுப் பெயர்கள்

அவன் - ஆண்பால்

அவள் - பெண்பால்

அவர் - பலர்பால்

சேய்மைச் சுட்டுப் பெயர்கள்

அது - ஒன்றன்பால்

அவை - பலவின்பால்

இங்ஙனமே அண்மை

யிடைமைச் சுட்டுப்பெயர்களும்.

இடைமைச் சுட்டு, தமிழில் உலகவழக்கற்றது; இந்தியில் சேய்மைச் சுட்டாக வழங்குகின்றது. இந்திநிலை முந்தியது, அதன் பெயர் பிந்தியது.

வினாப்பெயர்கள்

ஏது-எது

ஏவன் - எவன்

ஏவள் - எவள் ஏவர் -எவர்

ஏவை - எவை

ஏ - யா. யா + அன் = யாவன். இங்ஙனமே ஏனையீறுகளையும் ஒட்டிக்கொள்க.