உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 16.pdf/133

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




தமிழ்மொழித் தோற்றம்

உத்தரம்: உ + தரம் = உத்தரம் = உயர்நிலை.

உகரம் உயர்ச்சி குறித்தல் முன்னர்க் கூறப்பட்டது.

தக்கணம் : தக்கு + அணம் = தக்கணம். தக்கு = தாழ்வு.

117

தக்குத்தொண்டை, தக்கில் பாடுதல் என்னும் வழக்குகளை நோக்குக. அணம் ஒரு பின்னொட்டு.

எனப்

பனிமலை எழுந்தபின், வடதிசை உயர்ந்தது, தென்திசை தாழ்ந்தது. அதனால் அவை முறையே உத்தரம் தக்கணம் பட்டன. இவற்றை மேற்கு கிழக்கு என்னும் பெயர்களுடன் ஒப்பு நோக்குக.

உத்தரம் தக்கணம் என்னும் தென்சொற்களே, உத்தர தக்ஷிண என்று வடமொழியில் வழங்குகின்றன என்பது தோற்றம்.

குடம் : குடம் = வளைவு. குடம் குடக்கு. அக்கு ஓர் ஈறு.

சூரியன் மேற்கேபோய் வளைவதனால், அத் திசை குடம் எனப்பட்டது. குடமலை, குடநாடு, குடவர், குடக்கோ என்பவை செந்தமிழ் வழக்குகளாதல் காண்க.

குணம் : குடம் - குணம். ட-ண, போலி. ஒ.நோ: படம் - பணம், கோடு- கோணு. குடக்கு குணக்கு.

குணம் = வளைவு. குணக்கெடுத்தல் என்னும் வழக்கை நோக்குக. சூரியன் கீழ்த்திசையிலும் வளைதல் காண்க. ஒரே வடி வடிவம் இரு திசைக்கும் வழங்கின் மயங்கற்கிடமாதலின், குடம் என்பது மேற்றிசைக்கும் குணம் என்பது கீழ்த்திசைக்கும் வரையறுக்கப்பட்டன. எண்ணுப்பெயர்

எ உயரச்சுட்டு. எ எண். எண்ணுதலால் தொகை மேன் மேலுயர்தல் காண்க.

ஒன்று : ஒல்-ஒ. ஒல்லுதல் பொருந்தல். ஒத்தல் பொருந்தல். ஒல் +து = ஒன்று = பொருந்தினது, ஒன்றானது.

இரண்டு :(இரள்) + து = இரண்டு.