உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 16.pdf/138

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




122

ஒப்பியன் மொழிநூல்

(1) தனிப்பெயர்

குறுமைப்பெயர் (Diminutives)

குள் - குள்ளன், குழவு, குழவி, குண்டு, குட்டி, குட்டன், குட்டான், குட்டம், குட்டை, குணில், குந்தாணி, குருளை, குருவி, குறள், குறளி, குறில், குற்றி குச்சி குச்சு, குஞ்சி -(குஞ்சு), குக்கல், குன்று,குன்றி, குன்னி, கூழி, கூழை, சில் - சில்லான், சிறுக்கன், சிடுக்கான், சிடுக்கான் சிச்சான்,சிண்டு, சிட்டி, சிட்டு,சீட்டு, சின்னம், சின்னான், சீனி, சுள் சுள்ளி, சுருவம், சுருவை, சுருங்கை, சுண்டு, சுக்கு, சுக்கல், சுப்பி. இங்ஙனமே பிறவும்.

-

(2) முன்னொட்டுச் சேர்பு

கண்விறகு, சுண்டெலி, சீனிமிளகாய், ஊசிமிளகாய், குறுமகன் (குறுமான்), குறுநொய், குக்கிராமம் (இருபிறப்பி), குற்றில் - குச்சில், பூஞ்சிட்டு, சில்லுக்கருப்புக்கட்டி, பிட்டுக் கருப்புக்கட்டி, கூழைவால், நரிக்கெளிறு, அரிசிப்பல், அரிநெல்லி, மணிக்குடல், கட்டைமண், குட்டிச்சுவர், பூச்சிமுள், அரைத்தவளை, சிற்றாமணக்கு, கதலிவாழை, இட்டிகை முதலியன.

(3) பின்னொட்டுச் சேர்பு

தூண்டில், முற்றில்-முச்சில், கெண்டைக்கசளி, அயிரைப் பொடி முதலியன.

(4) வலித்தல் திரிபு : (நந்து) - நத்தை.

(5) சொன்முறைமாற்று : (கால்வாய்) - வாய்க்கால்.

பருமைப்பெயர் (Augmentatives)

(1) தனிச்சொல்

கடல், கடகம், கடப்பான், கடா, சேடன், சேடா, சாலி, தாழி, நெடில், படாகை - பதாகை, பூதம், மிடா, முரடு, முருடு முதலியன. (2) முன்னொட்டுச் சேர்பு

ஆனைக்குவளை, பாம்புமுள், பேரீந்து, பொத்த மிளகாய், மொந்தன் வாழை, மோட்டெருமை, கட்டெறும்பு, கடப்பாரை, அல்லது