உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 16.pdf/139

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




தமிழ்மொழித் தோற்றம்

123

கட்டிப்பாரை, மாட்டுப்பல், கடகால், பரவைச்சட்டி, பெருநாரை முதலியன

(3) பின்னொட்டுச் சேர்பு

குன்றம், பொட்டல் முதலியன.

தொழிற்பெயர் (Gerundial and Abstract Nouns)

தொழிற்பெயரும் பண்புப்பெயரும் மிக நெருங்கியவை. இதனால் ஆங்கிலத்தில் அவை ஒரினமாகக் கூறப்படுகின்றன. கோபித்தல் என்னும் வடிவம் தொழிலையும் கோபம் என்னும் வடிவங் குணத்தையும் குறித்தலையும், மை து அம் முதலிய ஈறுகள் இவ் விருவகைப் பெயர்க்கும் பொதுவாயிருத்தலையும் நோக்குக. தன்மை, அறிவு, ஆற்றலென முத்திறப்பட்ட குணத்தின் வெளிப் பாடு அல்லது நுகர்ச்சியே தொழிலென்க. பண்பு, இயல்பு என்னும் பெயர்களும் முதலாவது தொழிற்பெயராக விருந்தவையே.

பண் + பு = பண்பு (செயல்). இயல் + பு = இயல்பு (நடக்கை).

தொழிற்பெயர்

தோன்றியவை :

வடிவங்கள்

பின்வரும்

முறையில்

(1) முதனிலைத் தொழிற்பெயர்

கா : அடி,

வெட்டு.

(2) முதனிலை திரிந்த தொழிற்பெயர்

கா: ஊண், பாடு, (கோட்படு)கோட்பாடு.

(3) ஈற்று வலியிரட்டித்த தொழிற்பெயர்

கா : எழுத்து, பாட்டு, மாற்று.

(4) இடைமெலிவலித்த தொழிற்பெயர் கா : விளக்கு, பொருத்து.

இந் நான்கு முறையும் அசையழுத்தம் பற்றியவை.

ஈற்று வலியிரட்டித்தலே, பிற்காலத்தில் மெலிதோன்றிய வடிவத்திற்கும் கொள்ளப்பட்டதாகவும் கொள்ளலாம்.

கா : இலகு இலக்கு. இலகு - இலங்கு. இலங்கு - இலக்கு.