உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 16.pdf/140

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




124

(5) ஈறுபெற்ற தொழிற்பெயர்

ஒப்பியன் மொழிநூல்

ஈறுகளெல்லாம் பற்பல சொற்களின் திரிபே. அவை பின் வருமாறு அறுவகைப்படும்:

(i) கைப்பெயர்

கை = செய்கை. கா : நடக்கை.

பாணி = கை. கா: சிரிப்பாணி (தென்னாட்டு வழக்கு).

(ii) இடப்பெயர்

இடம் - அடம் - அணம் - அனம் - அனை - ஆனை.

கா : கட்டிடம், கட்டடம், கட்டணம், விளம்பனம், வஞ்சனை, வாரானை.

இடம் - இதம் - தம் - சம். கா : தப்பிதம், கணிதம், கணிசம்.

அடம் - அரம் - அரவு. கா : விளம்பரம், தேற்றரவு.

இல் = வீடு, இடம். கா : எழில்.

இல்-அல்-ஆல். கா : எழில், எழல், எழால்.

தலை = (ஒரு சினைப்பெயர்), இடம். கா : விடுதலை. தலை - தல் - சல் - சில்.

கா : விடு தலை, கடைதல், கடைசல், (அடுசில்) -அடி சில்.

(iii) சுட்டிடப் பெயர்

(அது) - அத்து துசு.

கா : பாய்ந்து - பாய்ச்சு, காண் + து =

பாய்ச்சு, காண் + து = காட்டு. உருள் + து

உருட்டு. ஈன் + து = ஈற்று.

(அது) -அதிதி - சி. கா : மறதி, காட்சி.

அக்கு = அவ்விடம், இடம். கா : கணக்கு.

அகம் = அவ்விடம், இடம். கா : வஞ்சகம், நம்பகம்.

=

(அவ்) - அவு -வு. கா : செலவு, தேய்வு.

-வி

(அவ்) - (அவி) - வி - இ. கேள்வி, வெகுளி.

(அவ்) - (அவை) - வை : பார்வை.

(அவ்) - (அவ) - (அ) -ஐ. கா : கொடை, விலை.

-

(அ) - ஆ. கா : உணா, பிணா, இரா, நிலா.