உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 16.pdf/141

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




தமிழ்மொழித் தோற்றம்

125

இகம், இதி என்பவை இகரச் சுட்டடிப் பெயரான தொழிற்பெயரீறுகள்.

(கா: தேவிகம்,காவிதி)

வுகரவீறே உகரமாக இலக்கண நூல்களிற் கூறப்படுகின்றது.

உள் = பின்னிடம், உள்ளிடம், இடம். உவள் - உள்.

கா : விக்குள், செய்யுள், கடவுள்.

(iv) நீர்ப்பெயர் : அம் = நீர்.அப்பு (நீர்)ப்பு-பு. கா: கோட்டம். படிப்பு.

மை = நீர் . மை - மம் - மன். கா : பருமை, பருமம், பருமன். (v) மிகுதிப்பெயர் காடு = மிகுதி. ஒ.நோ: வெள்ளக்காடு. திரம் = திறம். கா : வேக்காடு, உருத்திரம்.

(vi) அளவுப் பெயர் : மானம் = அளவு. கா : படிமானம்.

(vii) இயக்கப் பெயர் : இயம் = இயக்கம். கா : கண்ணியம்.

(viii) எச்சந்தொடர்ந்த பெயர். கா : வந்தமை, வந்தது (வந்த + அது).

(ix) கலவைமுறை

கா: கொடுப்பு + அனை = கொடுப்பனை. கொள்வு + அனை

= கொள்வனை.

தீன்+இ = தீனி. கொள் + தல் = கோடல். திருத்து + அம் = திருத்தம். அத்து + ஐ = அத்தை - தை - சை.

கா : சிவத்தை, புரிசை.

ஒரு பகுதி பல ஈறும் பெறும்; ஈறுதோறும் பொருள் வேறுபடும். கா : கற்றல், கல்வி, கலை, கற்பு.

(x) இருமடித் தொழிற்பெயர்

கா : நகு + ஐ = நகை. நகை + பு = நகைப்பு.

கள் + அவு = களவு. களவுசெய் + தல் வுசெய் + தல் = களவு செய்தல்.

=