தமிழ்மொழித் தோற்றம்
125
இகம், இதி என்பவை இகரச் சுட்டடிப் பெயரான தொழிற்பெயரீறுகள்.
(கா: தேவிகம்,காவிதி)
வுகரவீறே உகரமாக இலக்கண நூல்களிற் கூறப்படுகின்றது.
உள் = பின்னிடம், உள்ளிடம், இடம். உவள் - உள்.
கா : விக்குள், செய்யுள், கடவுள்.
(iv) நீர்ப்பெயர் : அம் = நீர்.அப்பு (நீர்)ப்பு-பு. கா: கோட்டம். படிப்பு.
மை = நீர் . மை - மம் - மன். கா : பருமை, பருமம், பருமன். (v) மிகுதிப்பெயர் காடு = மிகுதி. ஒ.நோ: வெள்ளக்காடு. திரம் = திறம். கா : வேக்காடு, உருத்திரம்.
(vi) அளவுப் பெயர் : மானம் = அளவு. கா : படிமானம்.
(vii) இயக்கப் பெயர் : இயம் = இயக்கம். கா : கண்ணியம்.
(viii) எச்சந்தொடர்ந்த பெயர். கா : வந்தமை, வந்தது (வந்த + அது).
(ix) கலவைமுறை
கா: கொடுப்பு + அனை = கொடுப்பனை. கொள்வு + அனை
= கொள்வனை.
தீன்+இ = தீனி. கொள் + தல் = கோடல். திருத்து + அம் = திருத்தம். அத்து + ஐ = அத்தை - தை - சை.
கா : சிவத்தை, புரிசை.
ஒரு பகுதி பல ஈறும் பெறும்; ஈறுதோறும் பொருள் வேறுபடும். கா : கற்றல், கல்வி, கலை, கற்பு.
(x) இருமடித் தொழிற்பெயர்
கா : நகு + ஐ = நகை. நகை + பு = நகைப்பு.
கள் + அவு = களவு. களவுசெய் + தல் வுசெய் + தல் = களவு செய்தல்.
=