உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 16.pdf/143

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




தமிழ்மொழித் தோற்றம்

127

திரளை - திரணை - திரட்சி, திண்ணை. திரளை = திரட்சி, உருண்டை. திண்ணை திட்டை. திண்டு. திட்டு. திண்ணம் திட்டம்

-

-

=

உறுதி, தேற்றம். திரம் - திறம் -திடம், உறுதி. திண்ணம் = தடிப்பு, திரட்சி, உறுதி, தேற்றம். திண்ணை திணை = திரட்சி, குழு, வகுப்பு, ஒ.நோ: குழு =

திரட்சி,

பால்

கூட்டம்,

பகு + அல் = பகல் - பால் = பிரிவு.

வகுப்பு.

ஆண்பால் பெண்பாற் பெயர்கள் பின்வருமாறு மூவகையா

யமையும்.

(1) வேற்றுப்பெயர். கா : ஆடவன், பெண்டு.

(2) ஈற்றுப்பேறு. கா : மகன், மகள்.

ஆண்பாலீறுகள் அவன், அன், ஆன், ஒன், ன், மகன்

மன், வன், ஆளன், காரன் முதலியன.

-

மான்

கா : வில்லவன், இடையன், தட்டான், மறையோன், கோன், திருமகன்-திருமான் (ஸ்ரீமான்), களமன், மணாளன், வேலைக்காரன்.

பெண்பாலீறுகள் அவள், அள், ஆள், ஒள், ஐ, மகள் - மாள், மி, வி, மாட்டி, ஆட்டி, அத்தை, அத்தி, அச்சி, காரி முதலியன. இவற்றுள் ஈற்றயல் மூன்றும் முறைப்பெயர்கள்.

கா : வல்லவள், நல்லள், கண்ணாள், மாயோள், பண்டிதை, வேண்மகள்-வேண்மாள், சிறுமி, புலவி, பெருமாட்டி, தம்பிராட்டி, பரத்தை, வண்ணாத்தி, மருத்துவச்சி, வேலைக்காரி.

மேற்காட்டிய ஆண்பாலீறுகட்கெல்லாம் னகரவொற்றும், பெண்பாலீறுகட்கெல்லாம் ளகரவொற்றும் இகரமுமே மூலமாகும்.

மாந்தருள், ஆண்மை திரிந்த பெண்பாற் பெயர் பேடி என்பது; பெண்மை திரிந்த ஆண்பாற் பெயர் பேடன் என்பது. இவ் விருபாற்கும் பொதுப்பெயர் பேடு என்பது; இவ் விருபாலும் அல்லாததின் பெயர் அலி என்பது. (அலி மாந்தரும் உலகில் உளர்.)

அன் இ முதலிய ஈறுகள் இருதிணைக்கும் பொதுவாம்.

கா : கடுவன், கொள்ளி, கண்ணி.