உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 16.pdf/144

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




128

ஒப்பியன் மொழிநூல்

அஃறிணையிலும் ஆண்பால் பெண்பாலுண்டு.

(1) வேற்றுப்பெயர் : களிறு - பிடி.

(2) முன்னொட்டுச் சேர்பு ஆண்பனை சேங்கன்று - கிடாரிக்கன்று.

பெண்பனை,

(3) பின்னொட்டுச் சேர்பு : மயிற்சேவல் - மயிற்கோழி, மயிற்பேடை.

அஃறிணை யாண்பெண் பாற்பகுப்பு, திணைப்பாகுபாடு பற்றி இலக்கணத்திற் கொள்ளப்படவில்லை.

எண்

(4) முன்னொட்டுச் சேர்பு:

கா : ஆண்பிள்ளை, பெண்பிள்ளை.

பன்மையீறு.

சீன மொழியில், பன்மையுணர்தற்குத் தொகுதிப்பெயர் பெயர்களின் ஈற்றிற் சேர்க்கப்படுகிறது.

கா : gin = man. kiai = whole or totality.

=

gin - kiai men.

i = stranger. pei = class. i - pei = strangers. ngo = I. che = assembly. ngo - che = we.

தமிழிலும் 'கள்' ஈறு இங்ஙனம் தோன்றியதே.

கல

-

கள

களம். கள + அம்

களம்

கூட்டம். கூட்டத்தின்

பெயரே கூடும் இடத்தையுங் குறிக்கும்.

மன் று,மந்தை, அம்பலம் என்னும் பெயர்கள் கூட்டத்தையும் கூடுமிடத்தையுங் குறித்தல் காண்க.

'அவையஞ்சாமை' என்னும் அதிகாரத்தில்,

"உளரெனினு மில்லாரொ டொப்பர் களனஞ்சிக் கற்ற செலச்சொல்லா தார்”

(குறள்.736)

என்று திருவள்ளுவர் அவையைக் களனென்றார். நன்னூலாரும்

66

'காலங் களனே" என்றார்.

6 L.S.L. Vol. I, p. 48