உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 16.pdf/145

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




தமிழ்மொழித் தோற்றம்

கள - கள். மரங்கள - மரங்கள்.

கள்

ஈறு இருதிணைக்கும் பொது. கா : மக்கள், மாக்கள், மரங்கள். அர், அ,வை என்பவை இயல்பானவாகவே தெரிகின்றன. குருவார் - குருமார். வ- ம, போலி.

வேற்றுமை

129

வேறு + மை = வேற்றுமை. பெயரின் இயல்பான எழுவாய்ப் பொருள், செய்பொருள் கருவிப்பொருள் முதலியவாக வேறு படுவது வேற்றுமை.

எட்டுவேற்றுமைகளுள்,

1ஆம்,

2ஆம், 3ஆம், 4ஆம்,

6ஆம், 7ஆம் வேற்றுமைகளே முந்தித் தோன்றியவை. இவற்றுள்ளும், 2ஆம், 4ஆம், 7ஆம் வேற்றுமைகளே மிக முந்தியவை என்று கொள்ள இடமுண்டு. முதல் வேற்றுமையிலிருந்து 8ஆம் வேற்றுமை தோன்றினது. 8ஆம் வேற்றுமையே இறுதியில் தோன்றினது. தொல்காப்பியர் காலத்தில், விளியைச் சேர்க்காமல் வேற்றுமை யேழென்றும், அதனைச் சேர்த்து வேற்றுமை யெட்டென்றும் இருகொள்கைகள் நிலவின. தொல்காப்பியர்,

என் என்று

"வேற்றுமை தாமே ஏழென மொழிப” "விளிகொள் வதன்கண் விளியோ டெட்டே'

(தொல். சொல்.62)

(தொல்.சொல்.63)

கூறியபின்பு, வேற்றுமை யெட்டென்னுங் கொள்கை

நிலைத்துவிட்டது.

எட்டு வேற்றுமைகளும் இப்போதமைந்துள்ள முறைக்குக் காரணத்தை, பின்வரும் வினாக்களாலும் கூற்றாலு மறியலாம்.

அழகன் (யார்? அல்லது) என்ன செய்தான்? எதைச் செய்தான்? எதனாற் செய்தான்? எதற்குச் செய்தான்? எதனின்று செய்தான்? அது இப்போது யாரது? யாரிடத்திலிருக்கிறது?

2ஆம் வேற்றுமையுருபு ஐ.

எட்டாம் வேற்றுமை இறுதியில் தோன்றினதினால், இறுதியில் வைக்கப்பட்டது. அது முன்னிலை எழுவாயே.

இது ஆய் என்னும் வினையெச்சத்தின் திரிபாயிருக்கலாம். சோறாய்ச் சாப்பிட்டான், பெட்டியாய்ச் செய்தான் என்னும்