உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 16.pdf/146

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




130

ஒப்பியன் மொழிநூல்

வழக்குகள் இன்றுமுள்ளன. ஆய் என்பது ஐ என்று தெலுங்கிலும் திரிகின்றது.

-

கா : சாரமாயின (த.) சாரமைன (தெ.).

3ஆம் வேற்றுமையுருபு ஆல், ஆன், ஓடு, ஒடு, உடன்.

ஆல் - ஆன். ஒ.நோ: மேல - மேன.

இல் (7ஆம் வே.உ)-ஆல். ஒ.நோ: எழில் -எழால். மையில் எழுதினான் என்னும் வழக்கை நோக்குக. செருப்பாலடி யென்பதைச் செருப்பிலடி யென்பர் வடார்க்காட்டு வட்டகையார்.

கருவிப்பொருளும்

3ஆம் வேற்றுமைக்குரிய 7 ஆம் வேற்றுமைக்குரிய இடப்பொருளும் உணர்த்தக்கூடிய இல் என்னும் உருபு. அப் பொருள்களை அடிப்படையாகக் கொண்டு நீங்கற் (mo- tion from) கருத்தைச் சிறப்பாகப் பெற்று 5ஆம் வேற்றுமையாயிற்று.

குடம் - உடம் - உடன் - உடல். குடம்பு - உடம்பு. குடங்கு - உடங்கு. குடக்கு உடக்கு. குடம், குடம்பு முதலியவை கூட்டின் பெயர்கள். உடல் கூடுபோற் கருதப்பட்டது.

-

"குடம்பை தனித்தொழியப் புட்பறந் தற்றே

உடம்போ டுயிரிடை நட்பு'

என்றார் திருவள்ளுவர்.

(குறள்.338)

"கூடுவிட்டிங் காவிதான் போனபின்பு" என்றார் ஒளவையார். ‘கூடு விட்டுக் கூடு பாய்தல்' என்பது அறிவராற்றல் குறித்த வழக்கு.

ஒருவனுடன் இன்னொருவன் செல்லுதல், ஒருவன் தன் டம்போது செல்வது போன்றிருக்கிறது.

உடன் என்னும் சொல்லுக்குப் பதிலாக, கூட என்னுஞ் சொல்லும் வழங்குகின்றது. கூடு (பெ.)- கூடு (வி.) - கூட (நிகழ் கால வினையெச்சம்)

ஒடு என்பது சில காய்கனிகளின் கூடு. ஓடு ஒடு.

தோடு என்பதும் இங்ஙனமே. தோட என்பது தெலுங்கில் 3ஆம் வேற்றுமை உடனிகழ்ச்சியுருபு. ஒ.நோ: கூடு - கூட.