உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 16.pdf/150

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




134

ஒப்பியன் மொழிநூல்

இருதிணை ஐம்பால் மூவிடங்கட்கும் மலையாளத்திற்போல் எதிர்கால வினைமுற்றாக வழங்கிற்று.

நிகழ்காலவுணர்ச்சி தமிழர்க்குத் தோன்றியபோது, கில் என்னும் ஆற்றற்பொருள் வினையின் இறந்தகால முற்றுவடிவமே நிகழ்கால வினைமுற்றாகக் கொள்ளப்பட்டது. அதன் மூன்று நிலைகளாவன :

(1) கின்றான் = ஆற்றினான். ஒ.நோ: நின்றான், சென்றான்.

(2) செய்யகின்றான் = செய்ய ஆற்றினான், அவனுக்குச் செய்ய முடிந்தது.

ஒ.நோ: செய்ய நாட்டினான் (வழக்கற்றது), செய்ய மாட்டுவான்

(எ.கா.).

(3) செய்யகின்றான் (இடைக்குறை) = he does.

செய்கின்றான்

கூ

செய்கிறான்

இங்ஙனம்,கின்றான் என்னும் இறந்தகால முற்று, தனிவினை துணைவினை நிகழ்காலவினைமுற்று என மூன்று நிலைகளை அடைந்துள்ளது. மூன்றாம் நிலையின் பின், கின்று கிறு என்பவை நிகழ்கால இடைநிலைகளாகப் பிரித்துக் கூறப் பட்டன. ஆநின்று என்றோர் இடைநிலையில்லை. செய்து நின்றான் என்று பொருள்படும் செய்யா நின்றான் என்னும் தொடர்மொழியையே, சொல்லாகக்கொண்டு, ஆநின்று என்பதோர் இடைநிலையெனக் கூறினர் பவணந்தியார்.

பண்டை யிறந்தகால எதிர்கால வினைமுற்று வடிவங்கள்

ஒரு

இ.கா.

எ.கா.

அவன் செய்து

அவன் செய்யும்

அவள் செய்து

அவள் செய்யும்

அவர் செய்து

அவர் செய்யும்

அது செய்து

அது செய்யும்

அவை செய்து

நான் செய்து

நாம் செய்து

அவை செய்யும் நான் செய்யும் நாம் செய்யும்