உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 16.pdf/153

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




தமிழ்மொழித் தோற்றம்

137

இவை முற்றெச்ச மெனப்படும். இவையே பிற்காலத்தில் வான் பான் மார் ஈற்று வினையெச்சங்களாகக் கூறப்பட்டன.

என்

"மாரைக் கிளவியும் பல்லோர் படர்க்கை காலக் கிளவியோடு முடியும் என்ப"

(தொல்.691)

று தொல்காப்பியர் கூறுதல் காண்க. வான் பான் ஈற்று முற்றெச்சங்கள் பிற்காலத்தில் இருதிணை ஐம்பால் மூவிடங்கட்கும் வழங்கப்பட்டன.

செய்பாக்கு என்பதை, செய்பு + ஆக்கு (செயலை ஆக்க) என்று பிரிக்கலாம். ஆக்க - ஆக்கு (திரிபு).

பெயரெச்சம்

எச்சவினை

பெயரெச்சமெல்லாம் அன் சாரியை பெறாத அகரவீற்றுப் பலவின்பாற் படர்க்கை வினைமுற்றுகளே.

கா : வினைமுற்று

அவை செய்த

பெயரெச்சம்

செய்த

பையன்

அவை செய்கின்ற

அவை செய்யும்

செய்கின்ற

பையன்

செய்யும்

பையன்

அவை உள்ள

உள்ள

பையன்

அவை நல்ல

நல்ல

பையன்

படர்க்கைப் பலவின்பால் வினைமுற்று பிற பாலிடங்கட்கும் வழங்கக்கூடியதை, அல்ல என்னும் படர்க்கைப் பலவின்பால் எதிர்மறைக்குறிப்பு வினைமுற்று, இப்போது இருதிணை ஐம்பால் மூவிடங்கட்கும் வழங்குதல் நோக்கி யுணர்க.

வினைமுற்றே பெயரெச்சமாவதை 6ஆம் வேற்றுமையாலு முணர்க. கிழமை வேற்றுமை பெயரெச்ச வடிவினதென்று மாக்கசு முல்லரும் கூறுகிறார்.

வினையெச்சம்

இறந்தகால வினையெச்சங்கள் முன்னர்க் கூறப்பட்டன. தழீஇ என்பதன் பண்டை வடிவம் தழி என்றிருந்ததாகத் தெரிகின்றது. தழி என்பது நீண்டு தழீ என்றாகி யிருக்கலாம். ழீ என்பது